சிறுபான்மையினர் கடனுதவி திட்டம்.. குறைந்த வட்டி! வருஷம் 30 லட்சம் பெறலாம்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மக்களுக்கு தனிநபர் கடன், கைவினைக் கலைஞர்கள் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தனி நபருக்கான கடன் திட்டத்தில் பெண்களுக்கு 6 சதவீத வட்டியில், ரூ.30 லட்சம் வரை கடன் கிடைக்கும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
மத்திய மாநில அரசுகள், மக்களுக்கு பயனளிக்கக் கூடிய பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றன. அவற்றில் ஒன்றாக சிறுபான்மையினருக்கான கடன் உதவி திட்டம் உள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது.

30 லட்சம் வரை கடன்
அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மக்களுக்கு தனிநபர் கடன், கைவினைக்கலைஞர்கள் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், மாணவ - மாணவிகளுக்கான கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தனிநபர் கடன் திட்டத்தில் ஆண்டுக்கு 6 % வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல, தனிநபருக்கான மற்றொரு கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ரூ.30 லட்சம் வரை கடன் கிடைக்கும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கைவினை கலைஞர்களுக்கான கடன்
கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டத்தை பொறுத்தவரை ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் ரூ.10 லட்சம் வரை கடன் அளிக்கபடுகிறது. கைவினை கலைஞர்களுக்கான மற்றொரு கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 6 சதவீதம் வட்டியிலும், பெண்களுக்கு 5 சதவீத வட்டியிலும் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.
சுய உதவிக்குழுவினருக்கான கடன் திட்டத்தில் 7 சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மற்றொரு திட்டத்தில் சுயஉதவிக்குழுவை சேர்ந்த ஆண்களுக்கு 10 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 8 சதவீத வட்டியிலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படும். இதுதவிர தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்புகளை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரையும், வெளிநாடுகளில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.30 லட்சம் வரையும் கல்விக்கடன் வழங்கப்பட உள்ளது.
மாணவர்கள் - மாணவிகள்
மற்றொரு திட்டத்தில், மாணவர்களுக்கு 8 சதவீத வட்டியிலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியிலும் ரூ.20 லட்சம் வரையும், வெளிநாடுகளில் கல்வி பயில்வோருக்கு ரூ.30 லட்சம் வரையும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் இந்த கடன் உதவியை பெற அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் அனுப்பும்பட்சத்தில் விண்ணப்பங்களை பரிசீலித்து கடன் உதவி வழங்கப்படும்'" இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய சான்றுகளை இணைத்து மேற்காணும் இடங்களில் சமர்ப்பிக்க வேண்டும்"












Click it and Unblock the Notifications