வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாக்கி இழப்பீடு - விடுவித்தது தமிழ்நாடு அரசு!
சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகை 2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாக்கி இழப்பீட்டு தொகையை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், ஆண்களை சித்ரவதை செய்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.

புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட 38 பேருக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி இழப்பீட்டு தொகை 3 கோடியே 79 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், இரண்டாவது தவணையாக ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் எட்டு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இழப்பீடு தொகை வழங்கினாலும், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை என சுட்டிக்காட்டினர். பாக்கி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என்றும் தெரிவித்தனர்.
பின்னர், 5 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட 2 கோடியே 41 லட்சம் ரூபாய் போக, மீதமுள்ள 2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்கும்படி சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்த தமிழக தலைமைச் செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை, இன்றைய தேதிக்கு தள்ளி வைத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 கோடியே 59 லட்சம் ரூபாய் வழங்குவதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், தொழில்துறையினருக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்கு தொடரலாமே தவிர, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு எதிராக வழக்கு தொடலாமா எனவும் கேள்வி எழுப்பினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை மக்களின் பணம். அரசுப் பணம் அல்ல. மக்களின் பணத்துக்கு அரசு அறங்காவலர் மட்டுமே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2.59 கோடியை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழ்நாடு அரசு விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இரண்டு தவணைகளாக இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலுவைத் தொகையும் விடுவிக்கப்பட்டது.
-
நிலம் அபகரிப்பு.. அதிமுக MP தம்பிதுரைக்கு எதிரான வழக்கு! மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications