கிளாம்பாக்கம் படிப்பினை: இன்னமும் சென்னை 'வீங்கி வெடிக்கனுமா'? திருச்சி, மதுரையை டார்கெட் செய்யலாமே!
சென்னை: சென்னை புறநகர் பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதாவது செங்கல்பட்டுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் கடும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
சென்னை மாநகரம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பல்வேறு கிராமங்களை ஒருங்கிணைத்து உருவான செயற்கையான நகரம்தான். நாடு விடுதலைக்குப் பின்னர் சென்னையை மையமாக கொண்டதாக மாநில அரசின் திட்டங்கள் அமைந்ததால் சென்னை மாநகரை நோக்கி பிற மாவட்ட மக்கள் படையெடுக்க தொடங்கினர்.

எத்தனை மாவட்டங்கள்?: இதனால் சென்னை மாநகர பகுதிகள் என்பது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களோடு இணைந்ததாக விரிவாங்கிவிட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்த ஏரிகள் காணாமல் போய் அத்தனையும் பல்வேறு வகை நிறுவனங்களாக, குடியிருப்புகளாக உருமாறிப் போய்விட்டன. இதனால் இயல்பாகவே பெருமழை வெள்ள பாதிப்பு அன்றாட நிகழ்வாகிவிட்டது சென்னை மக்களுக்கு.
விவாதமான கிளாம்பாக்கம்: சென்னையில் மக்கள் நெரிசல் அதிகமாகிக் கொண்டே போனதாதால் பிராட்வே டூ கோயம்பேடு டூ கிளாம்பாக்கம் என சென்னையில் புறநகர் பேருந்து நிலையங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது செங்கல்பட்டு நகருக்கு 20 கிமீ தொலைவுக்கு முன்னர் உள்ளது. அதாவது செங்கல்பட்டுக்கே போய்விட்டதே சென்னை மாநகரத்தின் புறநகர் பேருந்து நிலையம் என்பதுதான் யதார்த்தம். இதுதான் இப்போது கடும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இந்த விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி அரசு என்னதான் செய்ய வேண்டும் இத்தகைய விவாதங்களை, அதிருப்தியை தவிர்க்க? என்பதுதான் தற்போதைய தேவை.
எவ்வளவுதான் திணிப்பது?: சென்னை மற்றும் அதனைச் சுற்றிய மாவட்டங்களில் அல்லது சோ கால்ட் சென்னை புறநகரில் போதும் போதும் என்றளவுக்கு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உருவாகிவிட்டன. இன்னமும் கூடுதலாக இத்தகைய நிறுவனங்களை தொழிற்சாலைகளை திணித்துக் கொண்டே இருந்தால் சென்னை பெருநகரம் வீங்கி வெடிக்கும் என்ற நிலைமைதான். அதனால் போதும்.. சென்னை மற்றும் சோ கால்ட் புறநகருக்கான செயல் திட்டங்கள்.
திருச்சி, மதுரையை நோக்கி.. : இனியேனும் திருச்சி, மதுரையை மையமாக வைத்து இவற்றை சுற்றிய மாவட்டங்கள் பயனடைய ஏதுவாக புதிய திட்டங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களை உருவாக்க வேண்டும். தற்போது மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டது போல புதிய ஐடி நிறுவனங்கள், சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை தென் மாவட்டங்கள்- உள் மாவட்டங்களை உள்ளடக்கியதாக உருவாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் சென்னை பெருமாநகரம் மூச்சுவிடவும் முடியும்; சென்னையை நோக்கிய படையெடுப்பும் நிற்கும். இல்லையேல் சென்னையை நோக்கிய பிற மாவட்ட மக்களின் வாழ்வாதார தேடல் தொடரவே செய்யும் என்பதை இனியேனும் அரசு புரிந்து கொள்வதே காலத்தின் தேவையுமாகும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications