Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடுதான் இனி நம்பர் 1.. செமி கண்டக்டர்ஸ் உற்பத்தியில் புதிய மாஸ்டர்பிளான்.. இதெல்லாம் வேற லெவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வரும் தமிழ்நாடு அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர்களுக்கான புதிய மாநில கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட உள்ளது.

இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.

TN Govt working on an advanced electronics and a semiconductor policy to woo more investors

1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக அங்கே ஆலோசனைகளை மேற்கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடைசியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த ஆலோசனைகளின் முடிவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பல்வேறு மின்னனு சாதனங்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம்.

TN Govt working on an advanced electronics and a semiconductor policy to woo more investors

கொள்கை வெளியீடு; இந்த நிலையில்தான் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வரும் தமிழ்நாடு அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர்களுக்கான புதிய மாநில கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட உள்ளது.

நம்பர் 1 எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாளராக தனது இருப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, இந்த கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளது, சென்சார்கள், சிப்செட்கள் போன்ற மேம்பட்ட மின்னணு தயாரிப்புகளின் உற்பத்தி, செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களின் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை விரைவில் வெளியிடும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி 4.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இதை மேலும் உயர்த்தும் விதமாக கொள்கை வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு.. குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுடன் இணைந்து செமி கண்டக்டர்ஸ் உற்பத்திக்கான தனி கொள்கை கொண்ட மாநிலங்களாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை: சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது. சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த ஐபோன் உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+