Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசத்துதே அரசு கேபிள்..தூக்கி வீசப்படும் தனியார் செட்டாப் பாக்ஸ்கள்! அடடே வருதே IPTV.. செம அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் கேபிள் நிறுவனங்களுக்கு போட்டியாக அதிக அளவில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எச்டி செட்டாப் பாக்ஸ் வாங்க கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு 500 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து பல தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் நிறுவனத்திற்கு படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். மேலும் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதால் வாடிக்கையாளர்களும் அரசு கேபிள் டிவியை நோக்கி வருகை தருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்..

தமிழகத்தில் பல தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் டிடிஎச் சேவையிலும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் களத்தில் உள்ளது. இந்த நிலையில் அதிகமான கட்டணம் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகவும் அவதி அடைந்த நிலையில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி காலத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது

tamil nadu govt tactv theni

தொடர்ந்து அனலாக் முறையில் 200-க்கும் மேற்பட்ட சேனல்கள் 200 ரூபாய் என்ற கட்டணத்தில் வழங்கப்பட்டது. தொடர்ந்து ட்ராய் அனைத்து கேபிள் சேவைகளையும் டிஜிட்டலுக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனமும் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது தனியாருக்கு போட்டி அளிக்கும் வகையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு hd செட்டாப் பாக்ஸ்கள் வழங்க கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அரசு கேபிள் டிவி எச்டி தரத்துக்கு மாற இருக்கிறது. இதற்காக கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி 25 ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வாங்க 2 லட்சம் ரூபாய் வீதம் 500 கோடி வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குனர் வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா ஆகியோர் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை சந்தித்து அரசு கேபிள் டிவியுடன் இணைய வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சில தனியார் கேபிள் டிவி இணைப்புகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாலும் அரசு கேபிள் நோக்கி வரும், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

tamil nadu govt tactv theni

கடந்த ஆண்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 12 லட்சம் இணைப்புகள் இருந்த நிலையில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு வாரியம் அமைத்து கொடுத்தது, பழுதான செட்டாப்பாக்ஸ்களை பழுது நீக்கம் செய்ய சர்வீஸ் சென்டர் அமைத்தது, புதிய எச்டி செட்டாப்பாக்ஸ்கள் கொள்முதல் செய்தது, மாநில அளவில் 60 டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்கர்களை 132 ஆக உயர்த்தியது, 600 உள்ளூர் சேனல்களை ஒளிபரப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 15,57, 000 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் மீண்டும் பழைய எஸ்டி செட்டாப்பாக்ஸ் பற்றாக்குறையாலும், தற்போது பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக நிறுத்தம் காரணமாக தற்போது மீண்டும் ஒரு லட்சம் இணைப்புகள் குறைந்தன. அதனை உடனடியாக உயர்த்தவும் இத்துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் அடுத்து வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன் இன்டர்நெட் வழியாக ஐபிடிவி வழங்க வேண்டும் என்ற அரசின் அதிரடி உத்தரவின் பேரில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு புதிய எச்டி செட்டாப்பாக்ஸ் பெறுவதற்கு வங்கி கடன் பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு அரசு கேபிள் டிவியில் பதிவு செய்த ஆப்பரேட்டர்கள் 26000 அதில் தற்போது அரசு கேபிள் டிவியில் 10000 ஆப்பரேட்டர்கள் மட்டுமே உள்ளனர். எனவே தனியாருக்கு சென்ற ஆபரேட்டர்களை அரசு கேபிள் டிவியுடன் இணைத்து இணைப்புகளை உயர்த்தும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.

அரசு கேபிள் டிவியில் புதிய எச்டி பாக்ஸ் வருகையால் ஆபரேட்டர்கள் குறைந்த விலையில் நிறைந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் பல தனியார் நிறுவனங்களில் இருந்து விலகி, அரசு கேபிள் நோக்கி ஆபரேட்டர்களும், வாடிக்கையாளர்களும் வருவதாக, அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+