எந்த அளவுக்கும் எல்லை மீறுவார்கள்... மறைமுகத்தேர்தலில் ஒத்துழைப்பு தேவை - ஸ்டாலின் கடிதம்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுக எந்த அளவுக்கும் எல்லை மீறிச் செல்வார்கள்; கழகத்தின் முகவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுக எந்த அளவுக்கும் எல்லை மீறிச் செல்வார்கள்; கழகத்தின் முகவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மறைமுகத்தேர்தலில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்படுவோருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். வெற்றி பெற்றவர்கள் இன்னும் சில நாட்களில் வார்டு கவுன்சிலர்களாக பதவியேற்றுக்கொள்வார்கள்.
மார்ச் 4ஆம் தேதி மறைமுகத்தேர்தல் நடைபெற உள்ளது. மேயர், துணை மேயர், நகராட்சித்தலைவர், நகராட்சித்துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவரை வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள். எனவே தேர்தலில் தலைமை அறிவிக்கும் நபர்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், நமக்கு வெற்றி உறுதி. இதனால் நமக்கு கடமையும், பொறுப்பும் மிகுதியாகியுள்ளது. இருப்பினும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் குறைத்துக் கொண்டு, மக்கள் பணிகளை கூடுதலாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கண்ணும் கருத்துமாக
பத்தாண்டுகளாகப் பாழாக்கப்பட்ட உள்ளாட்சி ஜனநாயகத்தின் வேர்களுக்கு நீர் வார்த்து தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம். வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுக எந்த அளவுக்கும் எல்லை மீறிச் செல்வார்கள்; கழகத்தின் முகவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.நாம் அவதூறுகளையும் பொய்களையும் சாதனைகளால் எதிர்கொண்டோம்!

மறைமுகத் தேர்தல்
நமது வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். நாம் அமைதிகாத்து, சட்டப்படி எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். மறைமுகத்தேர்தலில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்படுவோருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வெற்றி பெறச்செய்யுங்கள்
தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாட்டின் கடைக்கோடி மனிதரும், ஜனநாயகத்தின் நிழலில் இளைப்பாற வேண்டும் என்பதே முதலமைச்சரான எனது எண்ணம். மக்களின் நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மிகுந்துள்ளது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications