அயோத்தியில் பாஜக காலி? ஆடிப்போன மோடி! அகிலேஷ் போட்ட ஸ்கெட்ச்.. அதிர்ச்சி தரும் சர்வே?
சென்னை: பாஜகவின் புண்ணிய பூமியாகக் கருதும் அயோத்தியிலேயே தோல்வியைச் சந்திக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
பாஜகவுக்குக் கடந்த 2019இல் பெரிதும் கைகொடுத்த மாநிலம் உபி. கிட்டத்தட்ட 60 எம்பிகள் மேல் பாஜக வென்றது. என்.டி.ஏ கூட்டணிக்கு 64 எம்பிகள் கிடைத்தனர். இந்தளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பாஜக வேறு எந்த மாநிலத்திலும் பெறவில்லை.

ஆனால், இந்த முறை குறைந்தது 40 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதில் இப்போது புதியதாக ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
அதாவது ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியிலேயே பாஜக தோல்வியைத் தழுவும் என்று ஒரு சர்வே முடிவு வெளியாகி உள்ளது.
பைசாபாத் தொகுதிக்குள்தான் அயோத்தி ராமர் கோயில் உள்ளது. இன்று அங்கு மிகப் பிரம்மாண்டமாகக் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு காலத்தில் அங்கே ராமர் கோயில் இல்லை. ஒரு கூடாரத்தில் வைத்துத்தான் ராமரை மக்கள் வழிபட்டு வந்தனர்.
அதைத்தான் மோடி இப்போது மீண்டும் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். அதாவது, 'மறுபடியும் ராமரைக் கூடாரத்திற்குள் கொண்டு போக முயன்று வருகிறார்கள்' என்று சொல்லி இருந்தார். அதற்கு அர்த்தம் ஒரு காலத்தில் ராமர் கூடாரத்தில்தான் வைக்கப்பட்டிருந்தார் என்பது பொருள்.
இந்நிலையில்தான் ஒரு ஆங்கில நாளிதழ் இண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இப்போது பைசாபாத் தொகுதி எம்பி ஆக லல்லு சிங் என்பவர் இருக்கிறார். இவர் பாஜக எம்பி. இவரது தொகுதிக்குள்தான் அயோத்தி ராமர் கோயில் உள்ளது.

2014 மற்றும் 2019 என இரண்டு முறை லல்லு சிங் இந்தத் தொகுதியிலிருந்து எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 5 முறை இந்த மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆகவே செல்வாக்கு மிக்க ஒருவர்தான் இவர்.
2014 இல் கிட்டத்தட்ட லல்லு சிங் 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 529,021 வாக்குகளை இவர் வாங்கி இருந்தார். இதே 2019இல் அவர் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றார்.
ஆக, லல்லு சிங்கிற்கு பைசாபாத் தொகுதியில் இப்போது 2024இல் எந்தளவுக்கு ஆதரவு உள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு ஆய்வு செய்து அதைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இத்தொகுதியில், இந்தமுறை லல்லு சிங்கிற்கு எதிராக சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஆனந்த் சென் யாதவ் போட்டியிட்டிருக்கிறார். அவரும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அமைச்சராகக் கூட இருந்தவர். இவர் 2019 எம்பி தேர்தலில் 4,63,544 வாக்குகளைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்திருந்தார்.
இந்த முறை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணியாகச் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கின்றன. ஆனால், 2019இல் காங் தனித்துப் போட்டியிட்டது. அப்போது காங் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகளை வாங்கி இருந்தார்.

அதே 2014இல் காங். வேட்பாளர் 1,29,917 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதே தேர்தலில் பிஎஸ்பி வேட்பாளர் 1,41,827 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
2019இல் மாயாவதியின் பிஎஸ்பி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியிலிருந்தது. ஆகவேதான் சமாஜ்வாதி வேட்பாளர் 4,63,544 வாக்குகளை வாங்க முடிந்தது.
இந்தமுறை மாயாவதி ஓட்டுகளைப் பிரிக்கிறார். அவரது கட்சி உபியில் ஒரு தலித் கட்சியாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே யாதவ் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை மாயாவதி பெறமாட்டார். அவை அனைத்து அகிலேஷ் பக்கம்தான் போகும் என்று சொல்லப்படுகிறது.
ஆகவே, இந்த முறை சமாஜ்வாதி வேட்பாளர் ஆனந்த் சென் யாதவுக்குத்தான் காங் ஓட்டுகள் எல்லாம் போகும். அப்படிப் பார்த்தால் பாஜக வேட்பாளர் கடந்த 2019இல் வாங்கிய வாக்குகளைக் கிட்டத்தட்ட நெருங்கி விடுவார்.
அடுத்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பைசாபாத்தில் சச்சிதானந்த பாண்டே என்ற ஒரு பிராமினை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் பிராமின் வாக்குகள் குறைவுதான். அங்குள்ள பிராமணர்கள் 100% பாஜகவுக்குத்தான் ஓட்டுப்போடுவார்கள்.
ஆனால், இந்த முறை இந்த வாக்குகள் சிதறும். கூடவே கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அவரும் பிராமின் ஓட்டுக்களைப் பிரிப்பார்.
ஆகவே, பாஜகவின் வெற்றி இந்த முறை பைசாபாத் தொகுதியில் கேள்விக்குரியதாக மாறியுள்ளது என்று இண்டியன் எக்ஸ்பிரஸ் சர்வே சொல்லி உள்ளது.

அயோத்திதான் பாஜகவின் அரசியலுக்கு அடித்தளமாக உள்ள தொகுதி. அங்கேயே பாஜக தோல்வியைத் தழுவும் என்கிறது இந்த ரிப்போர்ட்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்து வரும் பாஜகவுக்கு இந்தச் செய்தி நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கப் போவதில்லை. சொல்லப்போனால் பாஜகவின் தூக்கத்திற்கே வேட்டு வைத்துள்ளது.
இந்த பைசாபாத் தொகுதிக்கு உள்ளாகத்தான் தரியாபாத், ருடௌலி, மில்கிபூர், பிகாபூர், அயோத்தி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன.
அயோத்தி மட்டும் பாஜகவின் கையைவிட்டு இந்த முறை சென்றால், அக்கட்சியின் ஆணி வேரே அசைக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஒரு கவலையாக மாறியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications