சரியான பாயிண்ட்டை பிடித்த ஆளூர் ஷா நவாஸ்! சூடு பிடிக்கும் இவிஎம் சர்ச்சை!
சென்னை: நான் யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு உரிமை இல்லையா என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அதனை விசாரித்து வரும் நீதிமன்றம் தேர்தல் முடிவதற்குள் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை நேற்று உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேலும் இந்த விசாரணையின் போது நீதிபதி, 'நீதிமன்றத்தைப் போன்று தன்னாட்சி பெற்ற அமைப்புதான் தேர்தல் ஆணையம். அதன் சுதந்திரத்திற்குள் நீதிமன்றம் எப்படித் தலையிட முடியும்?' என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்தப் பேச்சு இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
ஒரு பக்கம் தேர்தல் ஆணையமே நடுநிலை தவறி வருவதாக 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூறி வருகின்றன. இப்போது நீதிபதி வேறு ஒரு கோணத்திற்கு வழக்கைச் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

ஆக, இரண்டுமே பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். "நான் யாருக்கு ஓட்டுப் போடுகிறேன் என்பது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. அதுதான் ஜனநாயகம்.
ஆனால், நான் போட்ட ஓட்டு அந்தச் சின்னத்திற்குத்தான் விழுந்துள்ளது என்பது எனக்குத் தெரியவேண்டும். அதற்குப் பெயர் வெளிப்படைத்தன்மை. அது இருக்க வேண்டுமா வேண்டாமா? இதைத்தான் எங்கள் தலைவர் திருமாவளவன் கேட்டுள்ளார்.
முன்பு சட்டம் எப்படி இருந்தது? உச்சநீதிமன்ற நீதிபதியை உள்ளடக்கித்தான் தேர்தல் ஆணையர் தேர்வு இருக்க வேண்டும் என்று இருந்த சட்டத்தைத் திருத்தியது யார்? இந்தப் பாஜக அரசுதான்.
உச்சநீதிமன்ற நீதிபதியைத் தூக்கி வெளியே போட்டுவிட்டு, மோடியே தேர்தல் ஆணையரை நியமிப்பார், மோடி அமைச்சரே தேர்தல் ஆணையரை நியமிப்பார் என ஒரு சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு பாஜக வேறு, தேர்தல் ஆணையம் என்பது வேறு யாராவது சொன்னால் எப்படி நம்புவது சொல்லுங்கள்?

ஒரு தேர்தல் ஆணையர் திடீரென்று உள்ளே வருகிறார். ஒருவர் திடீரென்று வெளியே போகிறார். இந்த இரண்டுக்குமே காரணம் கிடையாது. அதன்பிறகு பாஜக அரசு நியமித்த தேர்தல் ஆணையர்கள் இருவருமே பாஜகவின் நட்பு வட்டத்திலிருந்தவர்கள். அவர்களுக்காக நேரடியாகச் செயலாற்றியவர்கள்.
பாஜக அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனத் திட்டம் வைத்திருந்ததோ அதை எல்லாம் செய்து முடிப்பதற்காக வேலை பார்த்துவந்த ஊழியர்கள். ஆக, இந்தத் தேர்தல் ஆணையர்கள் தேர்வு என்பதே ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.

ஆக, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் போதே பாஜக எப்படிச் செயல்பட்டது? அதன் நோக்கம் என்ன என்பது மிகத் தெளிவாக விளங்கிவிட்டது.
இப்போது உச்சநீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது? தேர்தல் ஆணையம் என்பது நீதிமன்றத்தைப் போலத் தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்? எனக் கேட்டுள்ளது. இப்படி ஒரு நீதிபதி கருத்துச் சொல்லி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
அப்படி என்றால் சண்டிகர் மேயர் தேர்தலை நடத்தியது யார்? தேர்தல் ஆணையம். அங்குத் தேர்தல் அதிகாரி எப்படிச் செயல்பட்டார்? வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்காமல், வாக்குகளைச் செல்லாதவை என மாற்றிக் கூறி பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

கையும் களவுமாக அந்தத் தேர்தல் அதிகாரி எதிர்த்து நீதிமன்றத்திற்குத்தான் சென்றார்கள். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நாங்கள் தலையிட முடியாது என்று இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சொன்னதைப் போலச் சொல்லவில்லையே?
அன்று நீதிமன்றம் தலையிட்டதால்தான் சண்டிகர் தேர்தலில் நீதி காப்பாற்றப்பட்டது. அப்படி என்றால் அதே வாதம் ஏன் இந்தப் பொதுத் தேர்தலுக்குப் பொருந்தவில்லை? அதுதான் மிகப்பெரிய கேள்வி" என்கிறார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications