Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர் ரகசிய சந்திப்பு! சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக ஸ்டாலின் மீண்டும் பிரசாந்த் கிஷோரை பணிக்கு அமர்த்த உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதற்காக இருவரும் ரகசியமாக சந்தித்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது.

அரசியல் வட்டாரத்தில் இந்த வாரம் ஹைலைட் நியூஸ் என்றால், அது முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரசாந்த் கிஷோர் ரகசிய சந்திப்புதான். ஆனால், அந்தச் செய்தி அதிகம் வெளியே வரவிடாமல் திமுக தரப்பு தடுத்துவிட்டது என்கிறார்கள்.

TN Lok Sabha Election 2024 MK Stalin with Prashant Kishor secret meet

கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துத் தரக் கூடியவராகப் பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தான் வேலை பார்த்தார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

அவரது ஐபேக் நிறுவனம்தான் முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக் கள நிலவரங்களை ஆய்வு செய்து, எந்தப் பிரச்சினையை ஹைலைட் ஆக்க வேண்டும், எதை சைலண்ட் ஆகக் கடந்துபோக வேண்டும் என்பதை எல்லாம் ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது பிகேதான்.

அது ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையாக இருந்தாலும் சரி, தூத்துக்குடி லாக் அப் டெத் ஆக இருந்தாலும் சரி, பொள்ளாச்சி பாலியல் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அனைத்திற்கு ப்ளூ ப்ரிண்ட் போட்டு அதன் மீது சவாரி செய்ய வழிகாட்டியாக இருந்தவர் பிகே.

அவரது தலைமையில் கிட்டத்தட்ட 600 நபர்கள் திமுக ஐபேக் கம்பெனிக்காக வேலை பார்த்தார்கள். எடப்பாடி சின்னதாகத் தும்மினால் கூட அதைத் துரும்பாக எடுத்துக் கொள்ளாமல் ஆலையில் இட்டுப் பிழிய வேண்டிய கரும்பாக எடுத்துக் கொடுத்து வியூகத்தைக் கச்சிதமாக வகுத்து, காரியத்தைக் கச்சிதமாக நடத்திக் கொடுத்தவர் பிகே.

TN Lok Sabha Election 2024 MK Stalin with Prashant Kishor secret meet

ஊடக வட்டாரங்களில் உள்ள பலருக்கும் இந்தச் செய்திகள் பரவலாக தெரியும். அந்தச் சட்டசபைத் தேர்தலில் வெற்றிக் கனியை திமுக பறித்தது, பிகேவை வீட்டுக்கு அனுப்பலாம் என்று ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலர் முடிவு செய்தார்கள்.

அப்படியில்லை. அடுத்து 2024இல் மக்களவைத் தேர்தல் வருகிறது. அதற்கும் சேர்த்து அவரை தொடர்ந்து பயன்படுத்தலாம் என ஸ்டாலின் சொன்னதாக ஒரு செய்தி உலாவிக் கொண்டுள்ளது.

ஆனால், முதல்வர் வீட்டில் உள்ள சில பெரிய தலைகள் அதை விரும்பவில்லை. பிகேவிடம் உள்ள வித்தைகளை எல்லாம் நாங்கள் சுத்தமாக கற்றுக் கொண்டுவிட்டோம். அவரை 2024 வரை தொடர்ந்து வேலையில் அமர்த்தினால் பட்ஜெட் தாங்காது.

ஆகவே, அவரை வெளியேற்றிவிட்டு அதேவழியில் அவரது சகாக்களை வைத்து காரியத்தைக் கச்சிதமாக முடிக்கலாம் என்றே திமுக முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முடிவு எடுத்து பிகேவுக்கு பிரிவு உபசார விழா நடத்தி அனுப்பிவிட்டார்கள்.

TN Lok Sabha Election 2024 MK Stalin with Prashant Kishor secret meet

அவர் போனாலும் அவர் கட்டமைத்த அந்த அணி அப்படியே தொடர்ந்து திமுக அரசுக்கு ஆதரவாகப் பல காரியங்களைச் செய்து வந்தது. ஆட்சிக்கு எதிரானவர்கள் யார்? அவர்களை எப்படி ஆஃப் செய்வது? மேலும் ஆட்சிக்கு எதிரான பிரச்சினைகளை ஊடகங்கள் பெரிதாக்க விடாமல் எப்படித் தடுப்பது ஆகிய வேலைகளை எல்லாம் இந்த டீம் தான் பார்த்து வந்தது.

அப்படி இருந்தும் இந்த மக்களைவைத் தேர்தலில் பிகே அளவுக்குக் காரியத்தைக் கச்சிதமாக இந்த டீம் செய்யவில்லை. சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகள்தான் இவர்கள், திட்டமிட்டுச் செயல்படும் அளவுக்குக் காரியத்தில் வீரியம் பெற்றவர்கள் இல்லை என்ற தகவல் முதல்வர் காதுக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

நல்ல வேளையாக பாஜகவுக்குத் தமிழ்நாட்டில் ஒரு எதிர்ப்புணர்வு இயல்பாகவே இருந்ததாலும், அதிமுக தலைமையில் சரியான கூட்டணி அமையாததாலும் திமுக தரப்பு இந்தத் தேர்தலில் தப்பித்தது.

ஆனால், 2026 களம் அப்படி இருக்காது. ஆட்சியின் மீது அதிகப்படியான அதிருப்திகள் இருப்பதால், அதைச் சமாளிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தரப்பும் இப்படியான வியூகர்களை அமைக்க முடிவு செய்து டீமை பலப்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

TN Lok Sabha Election 2024 MK Stalin with Prashant Kishor secret meet

முன்பே பிகேவை சந்தித்து விஜய் ஆலோசனை பெற்றதாகச் சொல்லப்பட்டது. அவரும் 2026இல் களம் காண்கிறார். கூடவே ஸ்டாலினை அடுத்து உதயநிதியைத் தலைமையேற்ற வைப்பதற்காக வேலைகளையும் திமுக தீவிரப்படுத்தி வருகிறது.

இத்தனை வேலைகளையும் சமாளிக்க பிகே ஐடியாதான் சரியாக உதவும் என்று நம்புகிறாராம் முதல்வர். எனவே தான் வீட்டில் உள்ள வேறு சில பெரும் தலைகளை நம்பாமல் தானே களத்தில் இறங்கி பிகேவை சந்தித்து இருக்கிறார்.

அவரை நாம் இழுத்துப் போட்டுவிட்டால், அதிமுக, விஜய் தரப்பு அவரை வளைக்க முடியாது. கூடவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் பரவாயில்லை. ஒருவேளை மோடி மீண்டும் பிரதமராகிவிட்டால் திமுக சில விலை கொடுக்க வேண்டி வரும்.

ஆக, அதையும் சமாளிக்க பிகே என்ற கேடயம் உதவும் என்று முதல்வர் நம்புவதாகச் சொல்கிறார்கள். இது எல்லாம் வெளியில் அடிபடும் செய்திகள். பரவி வரும் தகவல்கள்.

அத்தனையும் அப்பட்டமான உண்மைகள் என்று நாம் சொல்லவில்லை. அரசியல் வட்டாரத்தில் இப்படியான அப்டேட் வந்து கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி உள்ளோம்.

அதைத்தாண்டி வேறு எந்த உள்நோக்கமும் நமக்கு இல்லை. இந்தச் சந்திப்பு உண்மையா? இல்லையா? என்பதை திமுக தரப்புதான் விளக்க வேண்டும். விளக்கினால் எது நிஜம்? எது பொய் என்பது அம்பலமாகிவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+