வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
சென்னை: பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறதா? வெறுப்பு பேச்சுக்குச் சட்டத்தில் என்ன மாதிரியான தண்டனைகள் உள்ளன என்பது பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது பிரதமர் மோடி பேசிய பேச்சுகள் இப்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

அவர் மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பெண்கள் வைத்துள்ள தங்கத்தைக் கணக்கிட்டு அனைவருக்கும் சமமாக அதைப் பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் மோடி, 'இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை எனது தாய்மார்களின் சகோதரிகளின் தாலியைக் கூட விட்டுவைக்காது' என்று மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது. ஆனால், இதுவரை எதிர்க்கட்சியினர் அளித்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.
அதற்கு மாறாக பாஜக தொடர்பாக வரும் புகார்களில் மட்டும் தேர்தல் ஆணையம் வேகம் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. பாஜக வேட்பாளர் ஹேமமாலினி குறித்து காங். கட்சியைச் சேர்ந்த ரன்தீப் சுர்ஜேவாலா சர்ச்சையாகப் பேசினார் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் உடனடியாக நோட்டீஸ் அனுப்புகிறது. விசாரணை நடத்துகிறது.
ஆனால், மோடி விசயத்தில் இதுவரை மவுனம் மட்டுமே பதிலாக இருக்கிறது. பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில சட்டரீதியான விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

மேலும் அதன் தீவிரம் குறித்தும் அவர் அலசி இருக்கிறார். இது பற்றி ஷ்யாம், "இந்த மாதிரியான வெறுப்பு பேச்சுக்கு நேரடியாகச் சட்ட விளக்கம் என்பது இல்லை. சர்வதேச சட்டவிதிமுறைகளில் கூட இதற்குச் சரியான விளக்கம் இல்லை என்றே சொல்ல வேண்டும். சட்டப்பிரிவு 153படி இது குற்றச்செயல்தான்.
ஐபிசி குற்றங்கள் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. வேண்டுமானால் மாநில அரசு ஒரு எஃப் ஐ ஆர் பதிவு செய்யலாம். அதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது.
உதாரணமாக உதயநிதியின் சனாதன பேச்சு தொடர்பாக எப்படிப் பல மாநிலங்களில் எப்படி எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டதோ, அதைப் போலப் பதிவு செய்துகொள்ளலாம்.
அர்பன் நக்சல் என்ற ஒரு வார்த்தையே இல்லை என்று நாடாளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சகமே விளக்கம் அளித்திருக்கிறது. அப்படி உள்ளபோது மோடி பயன்படுத்திய அர்பன் நக்சல் என்ற வார்த்தை பிரயோகமே தவறானது.
International conference on computational intelligence என்ற அமைப்பு அதாவது சுருக்கமாகச் சொன்னால் CSCI என்ற அமைப்பு இந்த வெறுப்பு பேச்சுக்கான விதிமுறைகளை எல்லாம் வகுத்துள்ளது.
அதன்படி எழுத்து ரீதியாகவும் பேச்சு ரீதியாகவும் பயன்படுத்தப்படும் சொற்களைக் கணினியில் நாம் செலுத்தினால், அதனைக் கணினியானது சேர்த்து அதற்கான விதிமுறைகளைக் கூறும்படி ஒரு அல்கரிதத்தை இந்த அமைப்பு ஏற்கெனவே உண்டாக்கி வைத்துள்ளது.
ஆகவே, வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்குத் தொடர முடியும். உச்சநீதிமன்றமே கூட சுமோடா வழக்கான இதனை எடுத்து விசாரிக்க முடியும். அதற்கான அழுத்தத்தை எதிர்க்கட்சிகள் தரலாம்.
2019இல் கடைசிக்கட்ட பிரச்சாரத்தின் போது தியான குகையிலிருந்து பரப்புரை செய்தார். அதைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்தன. அதற்குக்கூட இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படிப் பார்த்தால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கிட்டத்தட்ட 8 வருடங்களாகவே கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள். ஆனால், நம்மால் ஒரே கட்டமாகக் கூட தேர்தலை நடத்த முடியவில்லை. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அட்டவணையே கூட சந்தேகத்திற்கு உரியதாக இருந்தது. அதைக் கூட யாரும் ஒன்றும் கேள்வி கேட்க முடியவில்லை.
தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாகச் செயல்படவில்லை என்று பலரும் சொல்கிறார்கள். ஆணையத்தில் உள்ள மூன்று ஆணையர்களும் பாஜக நியமனம் செய்த ஆதரவாளர்களைப்போல்தான் உள்ளனர். நடுநிலையான நடவடிக்கை என்பது இருக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
ஒரு தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமிக்கும். ஒரு ஆணையரைக் குழுவில் உள்ள நீதிமன்ற நீதிபதி நியமிப்பார். ஒரு ஆணையரை எதிர்க்கட்சித் தலைவர் நியமிப்பார் என்றுதான் தீர்ப்பு இருந்தது.
ஆனால், அதில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நீர்த்துப் போகச் செய்துவிட்டது பாஜக அரசு. அப்புறம் எப்படி நடுநிலையை எதிர்பார்க்க முடியும்?" என்கிறார்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications