அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்!
திண்டுக்கல்: ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது பொய்யானது எனவும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பலவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் எனவும், பழைய ஓய்வூதியம் திட்டம் குறித்து அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் திமுக அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்," திமுகவிற்கு 10 சதவீதம் கூட வாக்கு வங்கி இல்லை என நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். வாக்கு வங்கி இல்லை என்று எப்படி தெரியும்?
எப்படி கணக்கு போட்டார்? கணக்கு எதுவும் எடுக்கப்பட்டதா? சர்வே எடுக்கப்பட்டதா? அல்லது மக்களின் மனநிலையை அறிந்து கூறுகிறாரா? எப்படி சொல்கிறார் என தெரியவில்லை. கூட்டல் கணக்கு அவருக்கு தெரியவில்லை என நினைக்கிறேன்.

திமுகவில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை என சொல்லி வருகின்றனர். மதிக்காமல் நான் எப்படி அமைச்சராக இருக்க முடியும்., மூன்று முறை இருக்கிறேன். ஒரே தொகுதியில் போட்டி போட அனுமதியை அளித்துள்ளனர். அப்போது எந்த அளவு மதித்து உள்ளனர். உயர்ந்த மரியாதை வைத்திருந்ததால் தான் வாய்ப்பு கொடுத்தார்கள். என் மகனுக்கும் வாய்ப்பு கொடுத்தார்கள்.
வேடசந்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் குப்பையில் போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஜெயலலிதா புகைப்படம் எங்கேயும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் தான் உள்ளது. ஜெயலலிதாவை யார் நினைத்துக் கொண்டிருக்கிறார். நானும் அவரின் புகைப்படத்தை தேடி பார்க்கிறேன். அவரது சிலையை எடுத்துவிட்டு எடப்பாடி சிலையை வைத்தாலும் வைப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி படம் தான் பெரியதாக இருக்கிறது. முரட்டு உருவம். எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என கூறினார். தற்பொழுது பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டார்.
கலைஞர் வீடு கட்டும் திட்டம் உரிய முறையில் சென்று பயனாளிகளுக்கு சேர்வதில்லை என வதந்தி தான் பரப்பப்படுகிறது. இந்த திட்டம் தமிழக அரசின் சிறந்த திட்டம். கேட்கும் அனைவருக்கும் இந்த திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. யாருக்கு இல்லை என்பதை கூறுங்கள். அவர்களுக்கும் கொடுக்க சொல்கிறோம். ஒரு லட்சம் வீட்டிற்கு 3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடு கட்டும் திட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டம் போல் எந்த திட்டமும் இல்லை. நான்கு தவணைகளில் பணம் யோசிக்காமல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் வீடுகள் முடிவடைந்துள்ளது. இந்த வருடம் ஒரு லட்சம் வீடுகள் வழங்கப்பட உள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகள் வெளியே வரும் என எல்.முருகன் கூறியுள்ளார். ஆனால் திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. ஒரு துரும்பு கூட அசையாது. அவர்கள் கூட்டணிக்கு ஆட்கள் இல்லை என்று ஊர் ஊராக அலைகின்றனர். கூட்டணி வெற்றி பெறுவது போல் இருந்தால் தான் சேர்வார்கள். அவர்களிடம் என்ன நம்பிக்கை உள்ளது? அதிமுக ஓட்டு வங்கி 10 முதல் 15 சதவீதம் குறைந்துவிட்டது. மக்களிடம் அவர்களுடைய ஃபேஸ் வேல்யூ (face value) குறைந்துவிட்டது. அதிமுக வரவே வராது என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்பது பொய்யானது. ஆசிரியர் அரசு ஊழியர்கள் கோரிக்கையை முதலமைச்சர் பலவற்றை நிறைவேற்றியுள்ளார். பல்வேறு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது கோரிக்கை நிறைவேற்றவில்லை என்பது உண்மைக்கு மாறானது. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முதல்வர் அறிவிப்பார். கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் யாரும் கையூட்டு பெற்றால் அது குறித்த தகவலை எனக்கு தெரியப்படுத்தவும்" என தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications