'போராடினால் நாடு சுடுகாடாகும் என்று கூறிய அறிவுஜிவிகளே'.. ரஜினியை தாக்கிய சமூகஆர்வலர்.. வைரல் ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கு மேல் போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. இதில் வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்பட்டது. இதனால் இந்த தொடர் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

வேளாண் சட்டங்கள் வாபஸ்

வேளாண் சட்டங்கள் வாபஸ்

மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததால் விவசாயிகளும் டெல்லியில் கடும் குளிர், கொரோனா தொற்றுக்கு மத்தியில் போராடி வந்தனர். இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அதிரடியாக அறிவித்தார். ''விவசாயிகளுக்கு எப்போதும் நல்லது நினைப்பவன் நான். விவசாய சட்டங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. அதனால் விவசாய சட்டங்களை வாபஸ் பெறுகிறோம்'' என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மோடி அரசு மண்டியிட்டு விட்டது

மோடி அரசு மண்டியிட்டு விட்டது

விவசாயிகளிடம் மோடி அரசு மண்டியிட்டு விட்டது என்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை மனதில் வைத்துதான் மத்திய அரசு வேளாண் சட்டத்தை ரத்து செய்யுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தில் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியை தாக்கிய சமூக ஆர்வலர்

ரஜினியை தாக்கிய சமூக ஆர்வலர்

இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஜி.சுந்தரராஜன் என்பவர் வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்து கூறி இருக்கிறார். அவர் வெளியிட்ட பதில், '' போராடினால் என்ன கிடைக்கும், போராடினால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று சொன்ன அறிவுஜிவிகளே, இதோ ஓராண்டாக விவசாயிகள் போராடியதன் விளைவாக இந்திய பிரதமர் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். வேறு என்ன வேண்டும், போராடினால் வாழ்க்கை கிடைக்கும்'' என்று கூறி இருந்தார்.

'நாடே சுடுகாடு ஆகிவிடும்'

'நாடே சுடுகாடு ஆகிவிடும்'

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், '' எதெற்கெடுத்தாலும் போராடினால் நாடே சுடுகாடு ஆகிவிடும்'' என்று ஆவேசமாக கூறி இருந்தார்.

ரஜினி ரசிகர்கள் பதிலடி

ரஜினி ரசிகர்கள் பதிலடி

ரஜினியின் இந்த பேச்ச்சை வைத்துதான் தற்போது கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் ஜி.சுந்தரராஜன், '' போராடினால் வாழ்க்கை கிடைக்கும். வேறு என்ன கிடைக்கும்'' என்று ரஜினிக்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ளார். சமூக ஆர்வலர் சுந்தரராஜனின் இந்த கருத்தை ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து ட்வீட் போடுகின்றனர். அதே வேளையில் ரஜினி ரசிகர்கள் சிலர் ''இது தேவையில்லாத வேலை. தொட்டதற்கெல்லாம் போராட்டம் போராட்டம் என்று இருக்கக் கூடாது என்றுதான் ரஜினி சொன்னார். இந்த வெற்றியே போராட்டத்திற்கு கிடைக்த வெற்றி அல்ல அறிவுஜீவி.. வரப்போற மாநில தேர்தலுக்காக கிடைத்தது.. ஸ்கூலுக்கு போற பசங்களுக்கு கூட இது தெரியும்'' என்று பலவிதமாக சமூக ஆர்வலருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+