ஆளுநர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை - அதிரவிட்ட சபாநாயகர் அப்பாவு!
சென்னை: அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் எம்.அப்பாவு கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு பிறகு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை காவிரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார் செந்தில் பாலாஜி.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உத்தரவிட்டார். பல்வேறு குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும், எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ரவி நீக்கியுள்ளார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. அவ்வாறு அவர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட்டுள்ளார். ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆளுநர் இந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் ரவி, அமைச்சர் நீக்கம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் சட்டபூர்வ ஆலோசனை கேட்டுள்ளதால் அதுவரை அமைச்சர் பதவில் செந்தில் பாலாஜி தொடரலாம் என ஆளுநர் ரவி முதல்வருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications