சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சும்மா கிழி தான்.. களமிறங்கிய மாநகராட்சி ஊழியர்கள்.. நள்ளிரவிலும் கட்சி போஸ்டர்கள் அழிப்பு தீவிரம்

மாநகராட்சி ஊழியர்கள் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகளை அகற்றுவது, விளம்பரப் படங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்... அதேபோல, இரவு நேரத்திலும் போஸ்டர்கள் மற்றும் பெயிண்ட் அடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நகரமைப்பு உள்ளாட்சித் தேர்தல் சுறுசுறுப்பாக களமிறங்கி உள்ளது.

Recommended Video

    சும்மா கிழி தான்.. களமிறங்கிய மாநகராட்சி ஊழியர்கள்.. நள்ளிரவிலும் கட்சி போஸ்டர்கள் அழிப்பு தீவிரம்

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடக்க போகிறது..

    இது தொடர்பான தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையமும் வெளியிட்டிருந்தது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதுமே தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

    சங்கர் ஏன் அங்கே வந்தார்.. திமுக எம்எல்ஏவுக்கு எதுக்கு இந்த வேலை? முதல்வர் ஸ்டாலினிடம் ஓபிஎஸ் கேள்விசங்கர் ஏன் அங்கே வந்தார்.. திமுக எம்எல்ஏவுக்கு எதுக்கு இந்த வேலை? முதல்வர் ஸ்டாலினிடம் ஓபிஎஸ் கேள்வி

     விளம்பர படங்கள்

    விளம்பர படங்கள்

    அந்த வகையில் மாவட்டந்தோறும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகளை அகற்றுவது, விளம்பரப் படங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்... குறிப்பாக மதுரையில் இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.. வாய்துறையினர், காவல்துறை அடங்கிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

     உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    அதேபோல நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் கோவையில் பல்வேறு தேர்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன... அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன... கோவை உக்கடம் மேம்பாலத்தின் துாண்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், அரசு பள்ளிகள், பொது சுவர்கள் என கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள கட்சி போஸ்டர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

     அரசு கட்டிடங்கள்

    அரசு கட்டிடங்கள்

    இதுபோல் அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் உள்ள சுவர்களில் எழுதப்பட்டு இருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன... மேலும் போது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன... மேலும், அரசியல் தலைவர்களின் சிலைகளையும் மூடும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்..

     கொடைக்கானல்

    கொடைக்கானல்

    திண்டுக்கல்லை பொறுத்தவரை, திண்டுக்கல் மாநகராட்சி, பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் நகராட்சிகள், 23 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, நகர்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், சுவர்கள், டிவைடர்கள் என பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் உள்ள அரசியல் பிரமுகர்கள், கட்சி சின்னங்கள், தலைவர்கள் பெயர் கொண்ட அனைத்து விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசு கட்டிடங்களில் உள்ள திட்டங்கள், திறப்பு விழா கல்வெட்டுகளும் மூடப்பட்டு வருகின்றன.

     நள்ளிரவிலும் தொடரும் பணி

    நள்ளிரவிலும் தொடரும் பணி

    கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி என்று தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இங்கும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், போஸ்டர்கள் அளிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.. மாலை மற்றும் இரவு மட்டும் இல்லாமல் நள்ளிரவிலும் போஸ்டர்கள் அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, ஜவஹர் பஜார், கரூர் பேருந்து நிலையம், மினி பேருந்து நிலையம், ஈஸ்வரன் கோயில் பின்புறம், பசுபதிபுரம், பிரதட்சிணம் ரோடு, பழைய பேருந்து நிலையம், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவிலும் போஸ்டர்கள் அழித்து அதனை சுவற்றில் இருந்து அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது..

    English summary
    TN Urban Local body: Election commission order so party posters removal process started in Tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X