குமரி, நெல்லையில் இடியுடன் கனமழை... அரபிக்கடலில் காற்றழுத்தம் - இரண்டு நாட்கள் சூறாவளி வீசும்
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திர காலமாக இருந்தாலும் தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரம், விளாத்திக்குளம், குழித்துறை, திருவாரூரில் மழை பெய்துள்ளது. வேதாரண்யம், ஜெயங்கொண்டத்திலும் மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து குளுமை பரவி வருகிறது.
இந்த நிலையில் குமரிக்கடல் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எத்தனை நாட்களுக்கு மழை
இன்று முதல் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் குமரி, நெல்லை, காரைக்கால், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கனமழை
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு தென் மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி வீசும்
இன்றும் நாளையும் தெற்கு அரபிக்கடல் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு,மாலத்தீவு கடல்பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாவதன் காரணமாக மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications