வெப்பச்சலனத்தால் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை...வானிலை மையத்தின் ஜில் அறிவிப்பு
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பசலனம் காரணமாக அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையோரப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. திருக்கோவிலூர், வீரபாண்டி, பரங்கிப்பேட்டை ஊர்களில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர்,தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளைய தினம் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
24ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 26ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications