வெல்லும் தமிழ்ப் பெண்கள்.. மொத்தமாக மேடையேற்றப்பட்ட பெண் அதிகாரிகள்.. அமுதா ஐஏஎஸ் சொன்ன வார்த்தை
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சி, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற பெயரில் நடத்தப்பட்டது பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாமானிய பெண்கள் தொடங்கி தமிழ்நாடு அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள பெண் அதிகாரிகள் வரை மேடை ஏற்றி கௌரவிக்கப்பட்டனர். இதில் நெகிழ்ந்த அமுதா ஐஏஎஸ், பெண்கள் கிட்சனில் இருந்தார்கள், கலைத்துறையில் இருந்தார்கள். இன்று கலெக்டராகவும், காக்கி சீருடை அணிந்து காவல்துறையில் உயரதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பல்வேறு துறைகளில் தடம் பதித்த பெண்கள், அதிகாரிகள், அமைச்சர், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்த பெண்களின் வெற்றி கதைகள் குறித்து பகிரப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் உயரதிகாரிகள் கௌரவிப்பு
மகளிருக்காக தமிழ்நாடு அரசு செய்து வரும் திட்டங்கள் குறித்து ஸ்டாலினும், உதயநிதியும் பேசினார்கள். அதேபோல நடிகர்கள் சத்யராஜ், தேவயானி உள்ளிட்டோர் தமிழ் மண்ணின் மகத்துவம், இங்கு பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், திராவிட சித்தாந்தம் உள்ளிட்டவற்றை பேசினார்கள். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக தமிழ்நாட்டின் பெண் உயரதிகாரிகள் மேடை ஏற்றி கௌரவிக்கப்பட்டனர். இதில் பெண் அதிகாரிகள் நெகிழ்ந்து போனார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் ஊடக செயலாளர் அமுதா ஐஏஎஸ், "இந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் பெண் அதிகாரிகளை கௌரவிக்கும் விதமாக எங்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக அதிகாரிகள் அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளனர். அதேபோல எங்கள் முன்னால் அமர்ந்துள்ள எண்ணற்ற பெண் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளனர்.
கிட்சன் டு கலெக்டர்
அவர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் கிட்சனில் இருந்தார்கள், கலைத்துறையில் இருந்தார்கள். இன்று கலெக்டராகவும், காக்கி சீருடை அணிந்து காவல்துறையில் உயரதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். கராத்தே, கபடி என்று விளையாட்டுத்துறையிலும் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஊக்கமும், ஆக்கமும் அளித்த அனைத்துத் தலைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் களத்திற்கு செல்லும்போது மக்கள் சொல்லும் பிரச்சனைகளை காது கொடுத்து கவனமாக கேட்பார்கள். அவர்களின் தேவைக்கேற்ப தான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தான் பெண்களுக்காக அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன." என்றார்.. பெண் அதிகாரிகள் மேடை ஏற்றி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு பாராட்டை பெற்றுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications