அண்ணாமலை அரசியலில் நுனிப்புல் மேயக் கூடாது! இது ஆரோக்யமான அரசியலுக்கு அழகல்ல! காங்கிரஸ் புத்திமதி!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நுனிப்புல் மேய்ந்து கருத்து கூறி வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என தமிழக காங்கிரஸ் அறிவுரை கூறியுள்ளது.
எதையும் ஆழ்ந்து -புரிந்து கருத்துக்களை கூறாமல், அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கிற வகையில் அண்ணாமலை பேசி வருவதாக விமர்சித்துள்ளது.
அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அரசியல் உள்நோக்கம்
இந்தியாவில் ஆட்சி மொழியாக இந்தியை எதிர்க்கிற தி.மு.க.வும், இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்திருப்பது எந்த அடிப்படையிலானது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். வரலாற்றை அறியாமல் அரசியல் உள்நோக்கத்துடன் திரிபுவாத கருத்துகளை கூறியிருக்கிறார்.

அறியாத அண்ணாமலை
பிரதமர் நேரு 1961 ல் கொடுத்த உறுதிமொழியின்படி, இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலமும் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று அறுதியிட்டுக் கூறியதை எவராலும் மறுத்திட இயலாது. அதோடு, பிரதமர் சாஸ்திரியும், பிரதமர் இந்திரா காந்தியும் ஆட்சி மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிப்பதற்கு பாதுகாப்பு வழங்கியதை அண்ணாமலை அறியாமல் போனது வியப்பைத் தருகிறது.

காவல் பணி
இந்தியக் காவல் பணியில் இந்தியை படிக்காமலேயே தேர்வு பெற்றதாக அண்ணாமலை புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். அவர் படித்த காலத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்பதற்கு காங்கிரஸ் ஆட்சி தான் காரணமே தவிர, பா.ஜ.க. ஆட்சி அல்ல. ஏனெனில், அப்போது இந்தியாவை ஆண்டது காங்கிரஸ் கட்சி தான் என்பதை அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தற்போது இந்திய காவல் பணியில் படிக்கிற நிலை ஏற்பட்டால் அவர் இந்தியை படிக்காமல் இருக்க முடியாது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

நுனிப்புல் மேயாதீர்
ஆட்சி மொழிக் குழு தலைவராக இருக்கிற அமித்ஷா கூறிய பரிந்துரைகளை படித்தால் அப்பட்டமாக ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை மட்டுமே திணிக்கிற நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியும். பா.ஜ.க.வின் நோக்கம் ஒரே மொழி - ஒரே நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் ஆட்சி மொழியான ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை திணிப்பதற்கு தீவிர முயற்சிகள் எடுத்து வருவதை அண்ணாமலையால் மறுக்க முடியாது.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications