தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்.. சென்னை ஆவடியில் ரயில் சேவை பாதிப்பு
சென்னை: ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ஆவடியில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். அந்த வகையில், கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பெயர் குறித்து பேசினார்.

இந்தியாவில் நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை விமர்சித்து பேசும் போது ராகுல் காந்தி குறிப்பிட்ட ஒரு வார்த்தை சர்ச்சையை கிளப்பியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிராக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டதாக தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்துள்ளார். இதனிடையே, சூரத் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில், ராகுல் எம்பி பதவி, அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (ஈ) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ன் படி பறிக்கப்பட்டது.
ராகுல் காந்தி மீது அரசியல் பழிவாங்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.
ஆரணி அருகே களம்பூர் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதியிலிருந்து விழுப்புரம், ஆரணி மார்க்கமாக சென்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
காட்பாடியில் வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் தலைமையில் காங்கிரசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை - திருவள்ளூர், திருவள்ளூர்- சென்னை மார்க்கத்தில் சுமார் அரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications