பொறியியல் கலந்தாய்வு..பிஇ, பிடெக் படிக்க 2.24 லட்சம் பேர் விண்ணப்பம்..26ல் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ்
சென்னை: இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 4ஆம் தேதியான நேற்றுடன் நிறைவடைந்தது. இதுவரை 2.24 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். விண்ணப்ப பதிவு செய்த மாணவர்கள் இன்று முதல் ஜூன் 9ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு கடந்த மே 5ம் தேதி தொடங்கியது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1.5 லட்சம் இடங்களுக்கு தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். இதனையொட்டி இன்று மாலைக்குள் விண்ணப்ப பதிவு செய்யும் மாணவர்கள் ஜூன் 9ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தி சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி வரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 073 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 301 பேர் கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 737 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. அத்துடன் கடைசி நாள் என்பதால் விண்ணப்ப பதிவு செய்யாத மாணவர்கள் உடனடியாக விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்களின் ரேண்டம் எண் ஜூன் 6ஆம் தேதி வெளியாகும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 5முதல் 20ஆம் தேதி வரை நடத்தப்படும். மேலும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்படும். அதில் ஏதும் தவறுகள் இருந்தால், அதன் புகார்களை ஜூன் 26 முதல் 30ஆம் தேதி வரை சேவை மையங்களில் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.

சிறப்பு பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, அண்ணா பல்கலை மற்றும் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் நாளை முதல் நடைபெற உள்ளது. இதில் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் நேரில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கு ஆன்லைன் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 2 முதல் 5ஆம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையும் நடத்தப்படும். துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி நிறைவு பெறும். எஸ்சி காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1, 2, 3ஆம் தேதிகளில் நடை பெறும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications