மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?.. ஒருநாள் தான் இருக்கு... அவகாசம் நீட்டிக்கப்படுமா?
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
சென்னை:மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிகிறது. அதனால், இன்னும் இணைக்காதவர்கள் கண்டிப்பாக இணைத்து விட வேண்டும் என்று மின் வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். அதன் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து மின் துறை அமைச்சர்தான் முடிவு செய்வார் என்றும் மின் ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. முன்னதாக இதுதான் இறுதிக்கெடு இதன்பிற்கு ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கண்டிபாக இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தல் விடுத்தது. இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.

துவக்கத்தில் மக்கள் தயக்கம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றது. ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற ஒரு அச்சம் மின் நுகர்வோர்கள் மத்தியில் நிலவியதால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு துவக்கத்தில் தயக்கம் காட்டினர். இருந்தாலும் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின்சாரத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது.

கால அவகாசம் நீட்டிப்பு
ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளையும் துரிதப்படுத்திய மின்சார வாரியம் அதற்காக தமிழகம் முழுவதும் மின்சார வாரியங்களில் ஸ்பெஷல் முகாம்களையும் அமைத்தது. மின்சார வாரியத்தின் வெப்சைட் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதியை மின்சார வாரியம் செய்து கொடுத்து இருந்தது. டிசம்பர் 31 ஆம் தேதி காலக்கெடு முடிந்தாலும் லட்சக்கணக்கானவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இதனால், ஜனவரி 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டது.

பிப்ரவரி 15-ம் தேதி கடைசி நாள்
ஒரு மாத கால அவகாசத்திற்கு பிறகும் சுமார் 40 லட்சம் மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தனர். இதையடுத்து, மீண்டும் 15 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து மின்சார வாரியம் அறிவித்தது. அதாவது பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

வீடுகளுக்கே செல்லும் மின் ஊழியர்கள்
மின்சார வாரியம் அறிவித்த இந்த கூடுதல் அவகாசம் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்காத மின்நுகர்வோர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆதார் எண் விவரங்களை பெற்று இணைக்கும் பணியில் மின்சார ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications