Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின் வாரியத்தில் மாற்றம்.. ரூ.10000 கோடிக்கு கடன் பத்திரங்கள்? பலே பிளானில் தமிழக மின்சார வாரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார வாரியம் அதிக செலவை எதிர்கொண்டு வருகிறது.. இதனால் கடன் வாங்கி, அந்த கடனுக்கு அதிக வட்டியை செலுத்தும் நிலைமையை எதிர்கொண்டு வருகிறது.. கடந்த வருட நிலவரப்படி, மின் வாரியத்தின் கடன் நிலுவை 1.60 லட்சம் கோடியாக உள்ளது. வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 16440 கோடி ரூபாய் வட்டியாக செலுத்தப்பட்டிருக்கிறதாம். இப்படிப்பட்ட சூழலில்தான், செலவுகளை சமாளிக்க ஒரு புதிய முடிவை மின்சார வாரியம் கையிலெடுத்துள்ளது

தமிழக மின்சார வாரியத்தை பொறுத்தவரை, மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடித்து வருகிறது.. அதனால்தான் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தையே கொண்டுவர முயன்று வருகிறது.

TNEB Tamil Nadu Electricity Board bonds

ஏனென்றால் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதிலும், அனைத்து மின் இணைப்புகளிலும், ஸ்டேடிக் மீட்டர் பொருத்தப்பட்டிருப்பினும்கூட, ஊழியர்கள் ரீடிங் எடுப்பதில் பல தவறுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.. எனவேதான், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த அரசு முன்வந்தது.

ஸ்மார்ட் மீட்டர் வசதிகள்

இந்த ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ஏற்கனவே ரத்தாகியிருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் மீண்டும் டெண்டர் விடுத்து, தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி, அவற்றை 93 வருடங்களுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய இந்த டெண்டரும் கோரப்பட்டிருந்தது.

சென்னை, வேலூர் மண்டலத்தில் 49.43 லட்சம், கோவை, ஈரோடு மண்டலத்தில் 56.74 லட்சம், கரூர், நெல்லை மண்டலங்களில் 49.98 லட்சம், திருச்சி, தஞ்சாவூர் மண்டலங்களில் 49.77 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் என 6 கட்டமாக பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அது தொடர்பான பணிகளும் வேகம் எடுத்துள்ளன

எகிறும் செலவுகள்

இப்படி பொதுமக்களின் நன்மைகளுக்காக பல்வேறு வசதிகளை, திட்டங்களை மின்சார வாரியம் செயல்படுத்தி வருகிறது.. அதேபோல இலவச மின்சாரத்தையும் விவசாயிகளின் நல்வாழ்வுக்காக கொண்டு வந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், மின்சார வாரியம் மீண்டும் ஒரு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.. அதாவது, தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் பகிர்மான கழகத்துக்குமின் கட்டணம், அரசு மானியம் வாயிலாக வருவாய் கிடைத்தாலும்கூட, செலவுகள் மிஞ்சிவிடுகின்றன.. இதனால் மின்சார வாரியத்துக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 2023 - 24ல் 98,884 கோடி ரூபாய் வருவாய் வந்தாலும், 1 லட்சம் கோடிக்கு செலவு வந்துவிட்டது.. அதேபோல, தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதனாலும் செலவுகளை சமாளிக்க முடியவில்லை.. மேலும் புதிய மின் திட்டங்களை செயல்படுத்தவும் முடிவதில்லை.

இந்த நிதி சிக்கலை சமாளிப்பதற்காக, மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் கடன் வாங்கப்படுகிறது. ஆனால், இந்த கடனுக்கான வட்டி என்பது மிக அதிகமாகும்.. அதாவது வட்டி மட்டுமே கடந்த 2023 - 24ல் ரூ.16,440 கோடி, 2022 - 23ல், ரூ.13,450 கட்டப்பட்டிருக்கிறதாம்.

கடன் பத்திரங்கள்

எனவேதான் கடன் வாங்குவதற்கு பதிலாக, அரசு உத்தரவாதத்துடன், 10,000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்ட, மின் வாரியம் முடிவு செய்திருக்கிறதாம்.. இந்த நிதி திரட்டுவதற்காக ஒப்பந்த நிறுவனத்தை நியமிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. தற்போதைய மார்க்கெட் நிலவரத்துக்கேற்றபடி, சம்பந்தப்பட்ட நிறுவனம் நிதியை திரட்டி, அதன் வட்டி உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கும் என தெரிகிறது.

ஆந்தவகையில், காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய நிதியம் போன்றவற்றின் வாயிலாக நிதி திரட்ட, மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, மின் வாரியத்தின் கடனுக்கான வட்டி செலவுடன் ஒப்பிடும்போது, கடன் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி செலவு குறைவாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+