டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எப்படி இருந்தது? "ஒரு" பறவை குறித்து கேட்கப்பட்ட கேள்வி? விடை தெரியுமா
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட பொது நிகழ்வுகள், நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கு விடையளியுங்கள் பார்க்கலாம். இந்த தேர்வு நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர் முதல் விஏஓ வரை பல துறைகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 இல் தொடங்கி 8 குரூப் வரை காணப்படுகிறது. இதில் இன்றைய தினம் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித் துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது.
இதில் prelims எனப்படும் முதல்நிலை தேர்வும் mains எனப்படும் முதன்மை தேர்வும் நடத்தப்படுகிறது. நேற்று நடந்த முதல் நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 2.38 லட்சம் பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் 797 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டது.
தேர்வர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வினை எழுதுவதற்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1,25,726 ஆண்களும், 1,12,501 பெண்களும், 20 மூன்றாம் பாலினத்தவரும் இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வை எழுதினர். இந்த தேர்வில் பொது அறிவில் 175 கேள்விகளும், மென்ட்டல் மேத்ஸில் 25 கேள்விகளும் என 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு 300 மதிப்பெண்கள் ஆகும். தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை.
இந்த தேர்வில் நடப்பு நிகழ்வுகள் குறித்தும் அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் ஜிஎஸ்டி குறித்தும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை பார்ப்போம்.
தமிழகத்தில் துவக்கப்பட்ட அவசரகால பாதுகாப்பு கொள்கையை 2021 அடையாளம் காண்க
A) மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021
B) நம்மை காக்கும் 48 திட்டம் 2021
C) அத்திகடவு அவிநாசி திட்டம் 2021
D) விபத்து நிவாரணத் திட்டம் 2021
E) விடை தெரியவில்லை
விடை: B) நம்மை காக்கும் 48 திட்டம் 2021
2023, டிசம்பரில் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் மிகவும் பாதிக்கப்பட்ட பறவை?
A) ஸ்பாட் பில்டு பெலிகன்
B) ஃபிளமிங்கோ
C) மக்கா
D) புறா
E) விடை தெரியவில்லை
விடை: A) ஸ்பாட் பில்டு பெலிகன்
எண்ணெய் கசிவால் இந்த பறவைகளின் நிறமே கருப்பாக மாறிவிட்டன.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தைப் பற்றி பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்
1) இந்த திட்டம் தமிழகத்தால் தொடங்கப்பட்டது
2) இது தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும்
3) இந்த திட்டம் நாட்டிலேயே முதல் முறையாகும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
A) 1 மற்றும் 2 மட்டும்
B) 2 மற்றும் 3 மட்டும்
C) 1 மற்றும் 3 மட்டும்
D) 1, 2, மற்றும் 3
E) விடை தெரியவில்லை
விடை: C) 1 மற்றும் 3 மட்டும்
ஏனென்றால் இந்த திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.
-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications