TNPSC: குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் உயர்த்தி அதிகரிப்பு.. டிஎன்பிஎஸ்சி சொன்ன குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 645 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 625 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. பல்வேறு அரசு காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி அதிகாரிகள், ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்து வருகிறது.

இந்நிலையில் தான் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ஜூலை 15ம் தேதி வெளியானது.
அந்த அறிவிப்பில் சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அதில் , ‛‛ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 625 பிற்சேர்க்கை இன்று (18.11.2025) வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களுக்காக அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1270 ஆகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications