TNPSC குரூப் 4 தேர்வு.. ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணாதீங்க.. இதுதான் லிங்க்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 3,935 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியிருப்பதால், காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதற்கான தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, 2025-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு இன்று அதாவது மே 24 தேதியே கடைசி நாள் ஆகும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 4 தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது....

tnpsc group 4 exam online application government Job 4

எனவேதான், குரூப் 4 தேர்வினை ஏராளமானோர் எழுதி வருகிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரே கட்ட தேர்வு என்பதாலும், இந்த தேர்வு எழுத 10ம் வகுப்பு தகுதி போதும் என்பதாலும், தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகிறது.

அந்தவகையில், பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்காக ஏப்ரல் 25 முதல் மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

வயது வரம்பு:

விஏஓ பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் 42 வயது வரையும், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 21 முதல் 37 வயது வரையும், இதர பதவிகளுக்கு 18 முதல் 34 வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு பட்டப்படிப்பு அவசியம். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்காக தேர்வை எழுதலாம். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு 10ம் வகுப்புடன் அதற்கான தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வனக் காப்பாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வனக் காவலர் பதவிக்கு 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்து பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். வகுப்பு பிரிவினருக்கு ஏற்ப கட்டண தளர்வு உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.. விண்ணப்பங்களை திருத்தம் செய்ய வேண்டுமானால், 29.05.2025 முதல் 31.05.2025 தேதி வரை அவகாசம் உள்ளது.. 12.07.2025 அன்று தேர்வு தேதியாகும். தேர்வு முடிவுகள் வெளியாவதையடுத்து, கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+