ரத்தாகுதா அரசு வேலைக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு? ஓலைச்சுவடி கேள்வி? பாயிண்ட்டுடன் வந்த சீமான்
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-4 தேர்வில் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுகிறது என்று தமிழக அரசு மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.. அத்துடன், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு மிக முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.. சீமான் முன்வைத்து வரும் இந்த கோரிக்கையானது பலரது கவனத்தை பெற்று வருகிறது.
கடந்த 12ம் தேதி , இந்த வருடத்துக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது.. இதன்மூலம் 3935 காலி அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வுகள் கடந்த 12ம் தேதி தேர்வுக்காக 11 லட்சம் பேர் வரை தேர்வு எழுதினார்கள்..

சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில்,, 11 லட்சம் வரை மட்டுமே தேர்வாகியிருந்தனர்.. ஆனால், இந்த முறை, வினாத்தாளில் பொதுத் தமிழ் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்ததாக சொல்கிறார்கள்..
தமிழ் மொழி பாடம்
அதுமட்டுமல்ல, தமிழ் மொழி குறித்த கேள்விகள் பாடத் திட்டத்திற்கு வெளியில் இருந்து இடம்பெற்றிருந்ததாகவும் சலசலப்புகள் கிளம்பி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-4 தேர்வில் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுகிறது என்று தமிழக அரசு மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
குற்றச்சாட்டுகள்
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வினாத் தாளில் தமிழ் மொழி குறித்த பெரும்பாலான கேள்விகள், பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து மிகக் கடினமான கேள்விகளாக இடம்பெற்றிருந்ததால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டு தேர்வர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழக அரசில் 3,395 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வினை ஏறத்தாழ 11 லட்சம் 50 ஆயிரம் தேர்வர்கள் எழுதியுள்ள நிலையில், வினாத்தாளில் ஆங்கிலமொழிப் பகுதி வினாக்கள் எளிதாகவும், தமிழ்மொழிப்பகுதி வினாக்கள் மிகக்கடினமாகவும் இருந்ததால் தேர்வர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஓலைச்சுவடி கேள்விகள்
குறிப்பாக தமிழ்மொழிப் பகுதியில் பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூடத் தேர்ச்சி அடைய முடியாத அளவிற்கு கடினமான வினாக்கள் தமிழ்மொழி பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆங்கிலப் பகுதி வினாக்கள் எளிதானதாக இடம்பெற்றுள்ளது தேர்வின் சமநிலையை முற்றாகச் சீர்குலைத்துள்ளது.
இதனால் அரசு வேலை கனவோடு இரவு பகலாகக் கண்மூடாமல் படித்து, கடின உழைப்பினை செலுத்திய தமிழிளம் தலைமுறை பிள்ளைகளின் எதிர்காலம் இருளாகி, மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அரசுப்பணியில் முன்னுரிமை
இதுதான் திமுக அரசு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கும் முறையா? இதுதான் தமிழ் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவமா? இதன் மூலம் தமிழ்வழியில் பயின்ற தேர்வர்களைப் போட்டியிலிருந்தே வெளியேற்றும் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகியுள்ளது.
அரசுப் பணியாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகளை செய்வதற்காகவே குரூப்-4 தேர்வில் பாடத்திட்டத்திற்கு அப்பாலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, தமிழ்மொழி வினாக்கள் மிகக்கடினமானதாக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
மறுதேர்வு நடத்த வேண்டும்
ஆகவே, குரூப்-4 தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பேற்று, தேர்வின் சமநிலை மற்றும் நடுநிலைத்தன்மையைக் காக்கும் பொருட்டு, நடந்து முடிந்த குரூப்-4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, விரைவில் மறுதேர்வு நடத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு அரசுப்பணியாளர் தேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் மீண்டும் ஏற்படா வண்ணம் மிகக்கவனமாகச் செயலாற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை கேட்டுக்கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications