அடங்கப்பா! மேட்ரிமோனி சேவை கொடுத்து.. கல்யாணமும் பண்ணி வைக்கும் நிறுவனம்.. சம்பள உயர்வு வேறயாம்
சென்னை: திறமையான ஊழியர்களை நீண்ட காலத்திற்குத் தக்க வைப்பது என்பது பொதுவாக அனைத்து நிறுவனங்களுக்கும் சிக்கல் தான். அதிலும் கொரோனாவுக்கு பின், திறமையான ஊழியர்களை ஐடி நிறுவனங்களால் தக்க வைக்க முடிவதில்லை.
இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட ஊழியர்களைத் தக்க வைக்கப் பல போனஸ்கள், சம்பள உயர்வுகளை அளித்து வருகிறது. பெரிய நிறுவனங்களுக்கே இந்த கதி என்றால் சிறிய நிறுவனங்கள் குறித்துச் சொல்லவா வேண்டும்!
அதிலும் குறிப்பாக 2ஆம் கட்ட மற்றும் 3ஆம் கட்ட நகரங்களில் திறமையான ஊழியர்களைத் தக்க வைப்பது என்பது குதிரைக் கொம்பாக மாறியுள்ளது.

மதுரை ஐடி நிறுவனம்
இதே சிக்கலைத் தான் மதுரையை மையமாகக் கொண்ட SMI (ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசொல்யூஷன்ஸ்) நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இப்போது அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றி வருகிறது. இந்நிறுவனம் திறமைசாலிகளைத் தக்க வைக்க அடுத்த கட்டத்திற்கே சென்றுவிட்டது என்று கூறலாம். ஊழியர்களைத் தக்க வைக்க இந்நிறுவனம் மேட்ச்மேக்கிங் சேவைகள் எனப்படும் மேட்ரிமோனி சேவைகளையும் கூட வழங்குகிறது. ஊழியர் திருமணம் செய்து கொள்ளும் போது சிறப்பு ஊதிய உயர்வு, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, எனப் பல சலுகைகளை வழங்குகிறது.

மிக குறைவு
இதன் காரணமாக நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே 10%க்கும் குறைவாகவே உள்ளது. இன்று, SMI நிறுவனத்தில் 750 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் சுமார் 40% பேர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்எம்ஐ நிறுவனம் முதலில் கடந்த 2006ஆம் ஆண்டு சிவகாசியில் தொடங்கியது. நிறுவனம் விரிவடையத் தொடங்கிய போது, சிவகாசி போன்ற சிறிய நகரத்தில் சரியான நபர்களை வேலைக்கு எடுப்பது சவாலாக மாறியது. இதையடுத்து அந்நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டில் மதுரைக்கு மாறியது.

காரணம்
இதன் காரணமாக நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே 10%க்கும் குறைவாகவே உள்ளது. இன்று, SMI நிறுவனத்தில் 750 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் சுமார் 40% பேர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்எம்ஐ நிறுவனம் முதலில் கடந்த 2006ஆம் ஆண்டு சிவகாசியில் தொடங்கியது. நிறுவனம் விரிவடையத் தொடங்கிய போது, சிவகாசி போன்ற சிறிய நகரத்தில் சரியான நபர்களை வேலைக்கு எடுப்பது சவாலாக மாறியது. இதையடுத்து அந்நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டில் மதுரைக்கு மாறியது.

யார் இவர்
திருப்பூரில் ஜவுளி ஆலையில் வேலை செய்தவர் தான் இந்த செல்வ கணேஷ். அதன் பின்னர் ஐடி துறைக்குள் வந்த இவர், IBM நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்தார். பின்னரை அதையும் விட்டுவிட்டு புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். இப்படி கீழே இருந்து மேலே வந்ததால், தன்னால் அனைத்து நிலை ஊழியர்கள் உடனும் இணக்கமாக இருக்க முடிவதாக செல்வ கணேஷ் குறிப்பிட்டார். முதல் 200 ஊழியர்கள் வரை பொறுமையாக விரிவடைந்த இந்நிறுவனம், அதன் பின்னர் ஜெட் வேகத்தில் வளர தொடங்கியது.

ஏன்
மேரேஜ் ஊதிய உயர்வு என்பது இந்நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இருக்கிறது. அதேநேரம் மேட்ரிமோனி சேவைகளை இந்நிறுவனம் பின்னாட்களிலேயே அளிக்கத் தொடங்கியது. இது தொடர்பாக செல்வ கணேஷ் கூறுகையில், "அவர்கள் என்னை ஒரு சகோதரனாகவே பார்க்கிறார்கள். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பலர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களின் வயதான பெற்றோரால் சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் மேட்ரிமோனி சேவையை இலவசமாக வழங்குகிறோம்.

மிக குறைவு
நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு இரண்டு முறை 6%-8% ஊதியம் உயர்த்தப்படும். எங்கள் நிறுவனத்தில் பல நீண்ட காலம் பணிபுரிகிறார்கள். அவர்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறோம். அதேநேரம் மோசமாக பணியாற்றும் 4-5% பேரால் நிறுவனத்தில் தொடர முடியாது. அதேபோல பெண்கள் பலர் திருமணத்திற்குப் பின்னர், அவர்களாகவே வேலையை விட்டுவிடுகிறார்கள். இதைத் தாண்டி கூட, நிறுவனத்தில் இருந்து வெளியேறுபவர்களின் சதவிகிதம் 13%ஆகவே உள்ளது" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications