தமிழகத்தில் கொரோனா மீண்டும் கிடுகிடு.. இன்று 1,385 பேருக்கு பாதிப்பு.. 7 மாவட்டங்களில் உச்சம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு ஆகி உள்ளது. கொரோனா பாதிப்பு அச்சம் காரணமாக பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 1,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,68,367
ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 659 பேர் மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,47,139 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புடன் 8,619 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பலி
தமிழகத்தில் கொரோனா தொற்றால் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 12609 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 4 பேரும், கோவை மற்றும் செங்கல்பட்டில் தலா 2 பேரும் பலியாகி உள்ளனர்.

RT-PCR சோதனை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகளையும் தடுப்பூசி வழங்குவதையும் தமிழக அரசு அதிகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 73,027 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,85,34,311 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 73,247 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 1,88,54,356 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிலவரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏழு மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. இதேபோல் திருப்பூர், சேலம், காஞ்சிபுரம், மதுரை, கடலூர் போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் இன்று 496 பேருக்கும், கோவையில் 130 பேருக்கும், செங்கல்பட்டில் 126 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகம்
கொரோனா பாதிப்புன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சென்னையில் மிக அதிகமாக உள்ளது. சென்னையில் தற்போது 3211 பேரும், செங்கல்பட்டில் 817 பேரும், கோவையில் 768, திருவள்ளூரில் 534 பேரும், தஞ்சாவூரில் 504 பேரும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று தமிழகத்தின் எல்லா மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications