தமிழ்நாட்டில் இன்று 470 பேருக்கு கொரோனா பாதிப்பு... ஆறு பேர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதேபோல ஆறு பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: கொரோனாவிலிருந்து குணமடைந்த 479 பேர்!

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் புதிதாக 470 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

    Today 470 people tested positive for Coronavirus in Tamilnadu

    தமிழகத்தில் 48ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து, ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 4,260 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் இதுவரை 8,45,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா காரணமாக மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 479 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    தலைநகர் சென்னையில் இன்று 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 92வது நாளாக இன்றும் 500-க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல, தமிழகத்தில் இன்று மட்டும் 53,483 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் தற்போது வரை 1,67,62,668 பேருக்கு கொரோனா கண்டறியும் சோதனை செய்யப்பட்டுள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+