சென்னையில் இன்று அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அடிக்கடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, பாடங்களை எளிமையாக சொல்லி கொடுப்பது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பயிற்சி வகுப்புகள் இருக்கும்.

Today is a holiday for government and government aided schools in Chennai

இந்த பயிற்சி வகுப்புகள் என்பது மாவட்ட வாரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக இன்று சென்னையில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு நாளை (அதாவது இன்று) தினம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் இருப்பதன் காரணமாக நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+