4-5% அதிகரிப்பு.. இந்தியா முழுதும் சுங்கக்கட்டணம் அதிரடி உயர்வு.. லிஸ்ட்டில் தமிழக டோல்கேட்டுகள்
சென்னை: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் டோல்கேட்டுகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் இன்று முதல் குறைந்தபட்சம் 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 5 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை ஒரு நிதியாண்டு என்பது ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையிலான காலக்கட்டமாக உள்ளது. இதன்மூலம் மார்ச் 31ம் தேதியான நேற்றுடன் 2024-25ம் நிதியாண்டு முடிவுக்கு வந்தது. இன்று புதிய நிதியாண்டான 2025-26 பிறந்துள்ளது.

புதிய நிதியாண்டான ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பல்வேறு சேவைகளில் மாற்றம் என்பது கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளின் கட்டணம் என்பது அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டோல்கேட்டுகளில் நேற்று நள்ளிரவு முதல் குறைந்தபட்சம் 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 5 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் என்பது உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி டோல் கட்டணம் என்பது உயர்த்தப்படும். அந்த வகையில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் அதிகரிப்பு என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் ஒவ்வொரு டோல்கேட்டுகளுக்கும் தனித்தனியாக சுற்றிக்கை என்பது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 855 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள் 2008 ன்படி கட்டணம் என்பது வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் மட்டும் கட்டண உயர்வு என்பது அமலுக்கு வருகிறது. 38 சுங்கச்சாவடிகளில் கட்டணம் என்பது அதிகரிக்கப்படவில்லை. அதன்படி சென்னை பரனூர் சுங்கச்சாவடி, திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி, பள்ளிக்கொண்டா டோல்கேட்டுகளில் கட்டணம் என்பது அதிகரித்துள்ளது.
அதேபோல் புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி உள்பட மொத்தம் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு என்பது அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் நிதிச்சுமை என்பது ஏற்பட உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications