கிடுகிடுவென எகிறி வரும் தக்காளி விலை.. இன்னும் உயருமாம்.. காரணம் சொன்ன கோயம்பேடு காய்கறி வியாபாரி!
சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மொத்த விற்பனையில் கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.50க்கு விற்பனை ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய உள்ளூர் மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த மாதம் வரை தக்காளியின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் விலை சரிந்து ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் வரை தக்காளி ஒரு கிலோ ரூ.20 என்ற அளவில் விற்பனை ஆனது.
தற்போது பருவநிலை மாற்றத்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் தக்காளியின் வரத்து சரிந்து விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியின் விலை மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமார் பேசுகையில், "தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சென்ற வாரத்துடன் ஒப்பிடும்போது தக்காளி விலை கிலோவுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை விலை கூடியுள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் விலை அதிகரித்துள்ளது.
சென்ற வாரம் 20 ரூபாய் விற்றுக் கொண்டிருந்த தக்காளி மொத்த விற்பனையில் ரூ. 50, சில்லறை விற்பனையில் ரூ.60க்கு விற்பனை ஆகிறது. தக்காளி கொள்முதல் செய்யும் இடத்தில் அழுகல் அதிகமாக உள்ளது. அதனால் விலை அதிகமாக உள்ளது.
தக்காளி விலை உயர்வு இன்னும் 10 - 20 நாட்களுக்கு நீடிக்கும். தக்காளி விளைச்சல் குறைவால் வரத்து இப்போது அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆடி மாதத்தில் தான் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications