தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தக்காளி.. விலை அதிகரிப்பால் மக்கள் கலக்கம்.. இன்று எவ்வளவு கூடியிருக்கு?
சென்னை: தக்காளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தக்காளி விலை நேற்றை விட இன்று கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் சில்லறை வர்த்தகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.130 க்கு விற்பனையாகிறது.
நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக ஜுலை - ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை சற்று உயர்வது வழக்கம் தான் என்ற போதிலும் இந்த ஆண்டு தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து மக்களை அதிரவைத்து வருகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால் தற்போதோ தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து கொலோ 150 ரூபாயை எல்லாம் தாண்டியது.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி விலை உயர்வால் ஓட்டல்களையும் பாதித்துள்ளது. பல ஓட்டல்களில் தக்காளி சட்டினியை நிறுத்தி விட்டனர். சாலையோர உணவகங்களிலும் தக்காளி சட்டினியை கண்ணில் காட்டுவது இல்லை. தக்காளி வாங்குவதை பாதியாக குறைத்து விட்டதாகவும் சில ஓட்டல்கள் கூறுகின்றன.
எனினும், சில ஓட்டல்கள் வாடிக்கையாளர்களுக்காக விலை கூடுதலாக இருந்தாலும் தக்காளியை வாங்கி வருவதாக கூறி வருகின்றன. வீடுகளிலும் கிலோ கணக்கில் வாங்கிய மக்கள் கூட தற்போது கால் கிலோ, அரைகிலோ என குறைவாக வாங்க தொடங்கி விட்டனர். இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
தக்காளி விலை குறைந்து விடும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவே தக்காளி விலை உள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று ரூ.120 க்கு விற்பனையான தக்காளி இன்று ரூ. 130 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய ரக தக்காளி ஒரு கிலோ ரூ.100 க்கு விற்பனையாகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications