விடிஞ்சா 2026 தேர்தல்.. ஓட்டு போட போறீங்களா? இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க.. அப்புறம் ஜெயில்தான்
சென்னை: ஏப்ரல் 23 தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்குச்சாவடியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்கள் மீண்டும் கவனம் பெறுகின்றன. அந்தவகையில், வாக்குச்சாவடிக்குச் செல்லும் ஒவ்வொரு குடிமகனும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இந்தியாவில் தேர்தல் நாள் என்பது ஜனநாயகத்தின் முக்கியமான திருநாள் போன்றதாகக் கருதப்படுகிறது.. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பால் வழங்கப்பட்ட ஒரு முக்கிய உரிமையாகும்..

வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்பும் அங்கு இருப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.. இது தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.. வாக்குப்பதிவு அன்று, வாக்காளர்கள் தங்களது உரிமையைச் சரியாகப் பயன்படுத்த சில அடிப்படை விதிகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
விடிஞ்சா 2026 தேர்தல்
வாக்குப்பதிவு நாளில் அரசியல் கட்சி சின்னங்களை காட்டும் உடைகள் அல்லது பிரச்சாரப் பொருட்களை அணிந்து செல்லக்கூடாது.. இது தேர்தல் நடுநிலையை பாதிக்கக்கூடும் என்பதால் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.. வாக்குச் சாவடி அருகே பிரச்சாரம் செய்வதும், வாக்காளர்களை கவர முயற்சிப்பதும் சட்ட விரோதமாகும்.. அதேபோல் பணம் அல்லது பரிசு வழங்கி வாக்குகளை மாற்ற முயற்சிப்பதும் குற்றமாகும்..
வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது அலைபேசி கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியிலேயே போன்களை வைத்துவிட்டுச் செல்வது அல்லது சுவிட்ச்-ஆஃப் செய்வது நல்லது. வாக்குப்பதிவு மையத்தின் 100 மீட்டர் சுற்றளவிற்குள் எந்தவிதமான அரசியல் பிரச்சாரங்களோ அல்லது கட்சி சின்னங்கள் பொறித்த ஆடைகளையோ அணிந்து செல்லக் கூடாது. இது தேர்தல் விதிமீறலாகக் கருதப்படும்.
வாக்காளர்கள் - அடையாள அட்டை
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டை (VIS) மட்டும் வைத்துக்கொண்டு வாக்களிக்க முடியாது; அதனுடன் சேர்த்து தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். குறிப்பாக, வரிசையில் நிற்கும்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், அவர்களைத் தடையின்றி வாக்களிக்க அனுமதிப்பது ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமையாகும்.
வாக்காளர் தங்கள் விருப்பப்படி எந்தவொரு அரசியல் கட்சியையும் தேர்வு செய்ய முழு சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள்.. யாராலும் வாக்கை கட்டாயப்படுத்த முடியாது.. வாக்களித்த பின் அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டிய அவசியமும் இல்லை.. வாக்கு ரகசியமாக பாதுகாக்கப்படும் என்பது தேர்தல் அமைப்பின் முக்கியக் கொள்கையாகும்..
வாக்குப்பதிவு இயந்திரம்
அதேபோல், வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) வாக்கு செலுத்திய பிறகு, விவிபேட் (VVPAT) இயந்திரத்தில் உங்கள் வாக்குச் சீட்டு சரியாக விழுகிறதா என்பதை 7 வினாடிகள் சரிபார்த்துக்கொள்ளலாம். ஆனால் அங்கேயே தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் இந்த முறை கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு குடிநீர், நிழற்குடை மற்றும் அமருவதற்கு பெஞ்ச் வசதிகளைச் செய்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலையைக் காரணம் காட்டி ஜனநாயகக் கடமையைத் தவிர்க்க வேண்டாம்.
தேர்தல் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு
வாக்காளர் அமைதியாக நடந்து கொண்டு தேர்தல் பணியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.. எந்தவிதமான தகராறு அல்லது குழப்பமும் ஏற்படுத்தக்கூடாது.. எவ்விதமான போதைப் பொருட்களையும் பயன்படுத்தாமல் வாக்குச்சாவடிக்கு வருவதும் ஆரோக்கியமான மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
மொத்தத்தில் தேர்தல் நாள் என்பது ஒவ்வொரு குடிமகனும் தனது உரிமையை பொறுப்புடன் பயன்படுத்தும் நாள் ஆகும்.. சட்டங்களை மதித்து வாக்களிப்பது ஜனநாயகத்தின் வலிமையை அதிகரிக்கிறது.. சரியான முறையில் வாக்களிப்பதே நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.. உங்கள் ஒரு வாக்கு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் என்பதால், விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்...!!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications