விடிஞ்சா கவுன்டிங்.. ஒரு சின்ன ரீவைன்ட்.. தேர்தலில் பரபரப்பை கிளப்பிய டாப் 10 வேட்பாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக அரசியலின் மிகப் பெரிய ஆளுமைகளாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மரணமடைந்த பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன.

வழக்கமான அதிமுக, திமுக கூட்டணி மட்டுமின்றி இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. இவர்களில் சீமான் கூட்டணி இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை தனித்து போட்டியிட வைத்துள்ளார்.

ஏப்ரல் 6 ம் தேதி 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் 72.81 சதவீதம் ஒட்டுக்கள் பதிவாகின. இது 2016 சட்டசபை தேர்தலில் பதிவான 74.81 சதவீதத்தை விட 2 சதவீதம் குறைவாகும். இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் ஒட்டளித்துள்ளனர். இவர்கள் தவிர 1419 க்கும் அதிகமான மூன்றாம் பாலினத்தவர்களும் ஓட்டளித்துள்ளனர்.

மொத்தம் போட்டியிட்ட 3994 வேட்பாளர்களின், தேர்தலில் அதிக பரபரப்பை கிளப்பிய டாப் 10 வேட்பாளர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

 எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி 1974 ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அப்போது பொறுப்பு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை அடுத்து, 2017 ல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். எடப்பாடி தொகுதியில் 4 முறை எம்எல்ஏ.,வாக இருந்த பழனிச்சாமி அதிமுக.,வின் மிக பலமான வேட்பாளராக பார்க்கப்படுகிறார். இவரை எதிர்த்து திமுக.,வின் சம்பத் குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 வது முறையாக அதிமுக ஆட்சி அமையும் என நம்பிக்கையுடன் கூறி வரும் எடப்பாடி பழனிச்சாமியின் தொகதியில் 85.5 சதவீதம் ஒட்டுக்கள் பதிவாகி உள்ளன.

 ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவராக இருந்தவர். ஜெயலலிதாவால் ஆட்சியில் இல்லாமல் இருந்த போது பொறுப்பு முதல்வராக செயல்பட்டுள்ளார். இந்த முறை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2001 ம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த தொகுதியில் ஓபிஎஸ் வெற்றி பெற்று வருகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். இவரும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக அதிமுக.,வில் இருந்து, ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அமமுக.,விற்கு பிறகு அங்கிருந்து திமுக.,விற்கு சென்றார். இவருக்கு உள்ளூர் அதிமுக.,வினர் ஆதரவும், திமுக - காங்கிரஸ் கட்சிகளின் பாரம்பரிய வாக்காளர்களின் ஆதரவு உள்ளதால் ஓபிஎஸ்.,க்கு கடும் போட்டியாக இருப்பார் என கூறப்படுகிறது.

 மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு அக்கட்சியின் தலைவர் பதவியை ஏற்றவர் மு.க.ஸ்டாலின். இந்த முறை ஆட்சியை கைப்பற்றி, முதல்வராகும் முனைப்புடன் களமிறங்கி உள்ளார். 2011 ம் ஆண்டு முதல் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்து வரும் ஸ்டாலின், இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். கருணாநிதி முதல்வராக இருந்த போது துணை முதல்வர் பதவி வகித்த ஸ்டாலின், தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். 1989 ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று, சென்னை மேயரானார். 2001 ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினிடம் தோல்வியடைந்த அதிமுக.,வின் ஆதி ராஜாராம் தான் இந்த முறை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் மகனான உதயநிதி, தனது முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி திமுக.,வின் பாரம்பரிய கோட்டையாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் உதயநிதி அதிக எண்ணிக்கையிலான ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது. ஏனெனில் இது திமுக தலைவர் கருணாநிதி 1996 முதல் 2011 வரை தொடர்ந்து 3 முறை வென்ற தொகுதி. அதிமுக கூட்டணியில் இந்த முறை இந்த தொகுதி பாமக.,விற்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் உதயநிதி அதிக ஓட்டு வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

தமிழக அரசியலில் மற்றொரு முக்கிய நபராக பார்க்கப்படுபவர் டிடிவி தினகரன். சசிகலாவின் உறவினரான தினகரன், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அமமுக கட்சியை துவக்கினார். சென்னை ஆர்.கே.நகர் எம்எல்ஏ,வாக இருக்கும் தினகரன் இந்த முறை கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அதிமுக.,வில் பலமாக இருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுக சார்பில் கே.ஸ்ரீநிவாசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

 கமலஹாசன்

கமலஹாசன்

நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த கமல், லோக்சபா தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன் 2018 ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கினார். லோக்சபா தேர்தலில் 37 இடங்களில் போட்டியிட்ட கமலின் கட்சி 3.72 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. இப்த முறை 154 இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமலை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயகுமாரும், பாஜக.,வின் வானதி சீனிவாசனும் நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக.,வின் கோட்டையாக கருதப்படும் கோவை தெற்கு இந்த முறை கூட்டணி கட்சியான பாஜக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய மகளிரணி தலைவி என்பதால் வானதி சீனிவாசனுக்கும் இந்த தொகுதியில் செல்வாக்கு அதிகம். இருந்தாலும் முதல் முறையாக தேர்தலில் களம் கண்டுள்ள கமலுக்கு, அவரின் சினிமா புகழ் கைகொடுக்கும் என்பதால் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய, கிறிஸ்தவ, வடஇந்தியர்கள், கவுண்டர், நாயக்கர், செட்டியார், முக்குலக்தோர் சமூகத்தினரின் குறிப்பிட்ட அளவிலான ஓட்டுக்கள் கமலுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எல்.முருகன்

எல்.முருகன்

தமிழகத்தின் அடித்தளம் அமைக்க மாநில தலைவரான எல்.முருகனின் வெற்றி பக்கபலமாக இருக்கும் என நினைத்து அவருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளது பாஜக. பாஜக, அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என இருக்கட்சிகளும் நம்புவதால், இந்த கூட்டணி வெற்றி பெற்றால் முருகனுக்கு துணை முதல்வர் பதவி கேட்க பாஜக நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரசிற்கு பலமான இந்த தொகுதி இம்முறை திமுக.,வின் கயல்விழி செல்வராஜிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 சீமான்

சீமான்

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சீமான், நாம் தமிழர் கட்சியை துவங்கி தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார். இதுவரை ஒரு தொகுதியில் கூட அவரது கட்சியால் வெற்றி பெற முடியாவிட்டாலும், இந்த முறை யாருடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் கூறி வந்தார். இதனால் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் சீமானை எதிர்த்து அதிமுக சார்பில் குப்பனும், திமுக சார்நில் கே.பி.சங்கரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

குஷ்பு

குஷ்பு

முன்னணி நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த குஷ்பு, முதலில் திமுக.,வில் இணைந்தார். பிறகு அதிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி குஷ்பு பாஜக.,வில் இணைந்தார். இவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஜெயலலிதா அரசியலுக்கு வந்த போது அனுபவித்த அத்தனை துன்பங்களையும் தானும் அனுபவித்ததாக பிரச்சாரத்தில் பேசி பரபரப்பை கிளப்பியவர் குஷ்பு. இவரை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக.,வின் எழிலன் போட்டியிடுகிறார். திமுக.,வின் பலமான தொகுதியாக பார்க்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதி, தற்போது குஷ்புவால் நட்சத்திர தொகதியாக மாறி உள்ளது.

 வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தமிழக தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் வானதி சீனிவாசனும் ஒருவர். கோவையில் பாஜக.,விற்கு செல்வாக்கு இருந்தாலும் கோவை தெற்கு தொகுதி அதிமுக.,வின் பலமான தொகுதியாகும். இந்த தொகுதியில் அதிமுக, திமுக கட்சிகள் தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் கூட்டணி கட்சியான பாஜக.,விற்கு இந்த தொகுதியை அதிமுக ஒதுக்கி உள்ளது. இந்த தொகுதியில் திமுக போட்டியிட்டாலும் வானதி சீனிவாசன் மற்றும் கமல் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+