Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தூக்கமே இல்லைங்க".. 5 விஷயங்களை லிஸ்ட் போட்டு பேசி.. சீறிப்பாய்ந்த ஸ்டாலின்.. "அதை" கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று 5 முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு பேசினார்.

சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதேபோல் பொருளாளர், துணை பொதுச்செயலாளர்கள், பொதுச்செயலாளர் ஆகியோரும் இன்று தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் திமுக உட்கட்சி தேர்தலும் முடிவிற்கு வந்துள்ளது. ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் என்று அனைத்து தேர்தல்களும் முடிந்துவிட்டன.

இந்த நிலையில் இன்று நடந்த பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார். தனது பேச்சில் கனிமொழியுடன் இருக்கும் இணக்கம், உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு, சில திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு, பாஜக அதிமுக விமர்சனம், உட்கட்சி பூசல் ஆகியவை குறித்து வெளிப்படையாக பேசினார்.

 விஷயம் 1- கனிமொழி

விஷயம் 1- கனிமொழி

கனிமொழி குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்.. டெல்லியில் ஒலிக்கும் கர்ஜனை மொழி கனிமொழி. என்னுடைய அருமை தங்கை கனிமொழி. அவருக்கு இந்த பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் கனிமொழிக்கும் - ஸ்டாலினுக்கும் இடையில் மனஸ்தாபம், கனிமொழியை திமுகவில் முன்னிறுத்தவில்லை என்று பரவிய வதந்திகளுக்கு எல்லாம் முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த சில தினங்களாக உச்சம் பெற்று இருந்த வதந்திகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 விஷயம் 2 - உட்கட்சி பூசல்

விஷயம் 2 - உட்கட்சி பூசல்


இது போக உட்கட்சி தேர்தல் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த உட்கட்சி தேர்தலில் ஆங்காங்கே சில மோதல்கள் நடைபெற்றன. . மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டன. இந்த மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் பெரும்பாலும் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர். அதாவது ஒரே பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட்டால் கூட, அதில் ஒருவரிடம் பேசி சமாதானம் செய்து, போட்டியில் இருந்து வாபஸ் வாங்க வைத்தனர். கிட்டத்தட்ட 90 சதவிகித போஸ்ட்கள் அன் அப்போஸ்ட் வெற்றி. சில இடங்களில் மட்டும் இப்போதும் புகைச்சல்கள் காணப்படுகின்றன.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இதை பற்றி பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் அண்மையில் நடந்த அனைத்து தேர்தல்களில் திமுக வென்றுள்ளது. திமுக உட்கட்சித் தேர்தல் சில சலசலப்புகளை தவிர பொதுவாக அமைதியாக நடந்துள்ளது. போட்டியிடுவது மட்டுமல்ல விட்டுக் கொடுப்பதும் ஜனநாயகம்தான் என்பார் அண்ணா. சில நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இருப்பது கூட கட்சிக்கும் துரோகம் செய்வது போல. அனைத்து நிர்வாகிகளின் செயல்பாடுகளும் தலைமை கழகம் கண்காணிக்கும். எந்த ஒரு மனிதரையும் விட திமுக, கொள்கைதான் பெரிது என செயல்பட வேண்டும், என்று குறிப்பிட்டார்.

 விஷயம் 3 - பழி

விஷயம் 3 - பழி

சமீபத்தில் மேடை பேச்சுக்கள் காரணமாக சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்கள் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில், பொது இடங்களில் சிலர் நடந்து கொண்டதன் மூலம் திமுக பழிக்கு ஆளானது. நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்; கண்ணியமான சொற்களை பயன்படுத்துங்கள். நமது கவனத்தை திசை திருப்புவதுதான் எதிரிகளின் ஒரே நோக்கம் என்னை துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன செய்வது.

 திமுக

திமுக


திமுகவினர் பேசியதை வெட்டியும் ஒட்டியும் பரப்புவார்கள். ஆட்சிக்கு வந்த பின் திமுகவின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.செல்வாக்கு உயர்ந்திருப்பதுதான் பயத்தை உருவாக்கியிருக்கிறது; நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதே சிந்தனையாக உள்ளது. என் முகத்தை பார்த்தாலே தெரியும், கட்சியினர் சிலரது செயலால் தூக்கமின்று தவிக்கிறேன். துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது என்று குறிப்பிட்டார்.

 விஷயம் 4 - உதயநிதி

விஷயம் 4 - உதயநிதி

இது போக உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் உதயநிதியின் பாசறை கூட்டங்களை பார்க்கும் போது மிக மிக மிக நிறைவாக இருக்கிறது. அவர் தொடர்ந்து கூட்டங்களை நடத்துகிறார். அவரின் கூட்டங்களுக்கு நிர்வாகிகள் பலர் வருகிறார்கள். பாசறைக் கூட்டங்களை தெருமுனை கூட்டங்களாக, திண்ணை பிரசாரங்களாக, தனிமனித பிரசாரமாக செய்யுங்கள். மக்களிடம் செல்லுங்கள், என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 விஷயம் 5 -பாஜக அதிமுக

விஷயம் 5 -பாஜக அதிமுக

பாஜகவையும், திமுகவையும் விமர்சனம் செய்த ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக முக்கியமான சக்தியாக திகழ வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் 100% வெற்றிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம். பாஜக வெல்வதற்கு எந்த கீழ்த்தரமான செயலையும் செய்யக் கூடும். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள்- அதனால் பாஜக மூச்சு திணறுகிறது. அம்மையார் ஜெயலலிதா தலைமைக்கு பின் அதிமுக கலகலகத்து கிடக்கிறது. அதிமுகவின் பிளவுகளில் குளிர்காய நினைக்கிறது பாஜக, என்று குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+