ஒரே நைட்டில்.. எல்லாத்தையும் மாற்றிவிட்டார்.. இனி தங்கம் விலை காட்டு தீ போல உயரும்.. கவனம் பாஸ்!
சென்னை: தங்கத்தின் விலை இனி வரும் நாட்களில் தீவிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் விலை தீவிரமாக உயரப் போகிறது. நேற்று இரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்குவதாக அறிவித்தார்.
இது மிக நீண்ட வர்த்தக போரின் முதல் பகுதி ஆகும். வர்த்தக போரின் அதிகாரபூர்வ தொடக்கமாக இன்று தினம் அமைந்து உள்ளது. இதனால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும். தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினால் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதிபர் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதில் இருந்து, தங்கம் விலை வரலாற்று உச்சத்தை எட்டி வருகிறது. தற்போது அவுன்ஸ் ஒன்றுக்கு $2,900க்கு மேல் வர்த்தகம் செய்கிறது. இது 200 டாலர் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது 3100 டாலர் வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், வர்த்தக போர் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பல தங்கத்தை நோக்கி நகர்வது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் பல பணவீக்கம் காரணமாக டாலருக்கு பதில் தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளது. டாலர் கையிருப்பிற்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதே போல் அமெரிக்கா வர்த்தக போருக்கு இடையே.. தங்கத்தின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மக்கள் தங்கம் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கலாம். இதனால் அதற்கு முன் தங்கம் வாங்குவதற்கு அமெரிக்கர்கள் முயலலாம். அதன்படி பலர் தங்கத்தை வாங்கி குவிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வர்த்தக போர் காரணமாக.. உலகம் முழுக்க பணத்தின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். தங்கம் பக்கமே தனி நபர்கள், அமைப்புகள், ஏன் நாடுகள் கூட செல்லும். பொதுவாக வர்த்தக போர் சமயத்தில்.. உலகம் முழுக்க பங்குச்சந்தை சரமாரியாக சரியும். இந்தியாவிலும் அதேதான் நடக்கிறது
வர்த்தக போர்
மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரிகளையும், சீனா மீது 10% வரியையும் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தினார். இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா மீது கனடா கூடுதல் வரிகளை விதிக்க உள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா இன்னும் கடுமையான வரி விதிப்புகளை மேற்கொண்டால்.. கண்டிப்பாக அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் எரிபொருளை நம்பி நாங்கள் இல்லை. கனடாவின் எரிபொருளை நம்பித்தான் அமெரிக்கா இருக்கிறது . அப்படி இருக்க அமெரிக்கா எங்கள் மீது கூடுதல் வரியை விதிப்பது சரியாக இருக்காது. அப்படி விதிக்கும் பட்சத்தில் கனடாவின் எரிபொருளை அவர்கள் வாங்க முடியாது . மாறாக ரஷ்யாவிடம் எரிபொருள் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம்.
சீனா, வெனின்சுலா போன்ற நாடுகளிடம் வேண்டுமானால் எரிபொருள் வாங்கிக்கொள்ளலாம். எங்கள் மீது 25% வரி விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்க மாட்டோம் என்று கனடா அறிவித்து உள்ளது.
கனடா மீது வரி
கனடா மீது 25% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடாவின் எரிபொருட்களுக்கு 10% வரி விதித்துள்ளார். அதேபோல் மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளார். இதற்கு கனடா மற்றும் மெக்சிகோ.. அமெரிக்காவின் பொருட்களுக்கு 25% வரி விதித்து உத்தரவிட்டு உள்ளது.
கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ.. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ.. அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.
-
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
6 மாதத்தில் இல்லாத கொடுமை! தங்கம் விலை சடசடவென சரிவு! 6.3% வீழ்ச்சி.. வாங்க இது தருணமா? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications