சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"348 செக்டார்" போட்டும் இப்படியா?.. அண்ணாசாலையில் லாக்டவுனிலும் டிராபிக் ஜாம்.. வீடியோவை பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை 348 செக்டர்களாக பிரித்து, மக்கள் 10 மணிக்கு பின் வெளியே செல்ல இ பதிவு அவசியம் என்று கூறிய பின்பும் கூட பலர் சென்னையில் கூட்டம் கூட்டம் சுற்றி வருகிறார்கள்.

Recommended Video

    Chennai அண்ணாசாலையில் லாக்டவுனிலும் ஏற்பட்ட Traffic Jam.. அதிரடி ஆக்சன் எடுத்த போலீஸ்!

    சென்னையில் லாக்டவுன் நேரத்தில் மக்கள் பலர் வெளியே சுற்றுவதாக கடந்த சில நாட்களாக புகார் வைக்கப்பட்டு வருகிறது. காலை 10 மணி வரை மட்டுமே வெளியே சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் 10 மணிக்கு பின்பும் வெளியே இயல்பாக சுற்றி வருகிறார்கள்.

    ''கொரோனா நிலை பற்றி பேசினால்.. தேசத்துரோகி பட்டம் சூட்டுவார்கள்''.. சொல்வது உ.பி. பா.ஜ.க எம்.எல்.ஏ! ''கொரோனா நிலை பற்றி பேசினால்.. தேசத்துரோகி பட்டம் சூட்டுவார்கள்''.. சொல்வது உ.பி. பா.ஜ.க எம்.எல்.ஏ!

    எனக்கெல்லாம் கொரோனா வராது என்ற நம்பிக்கையோ என்னவோ.. கொரோனாவா அப்படின்னா என்ன? என்றே தெரியாதது போல பலர் சென்னையில் சர்வசாதாரணமாக கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறார்கள்.

    தமிழக போலீஸ்

    தமிழக போலீசும் மக்களிடையே பெரிய அளவில் கண்டிப்பு காட்டுவது இல்லை. மக்களை அடிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற அத்துமீறல்களை செய்வது இல்லை. வெளியே சுற்றும் மக்களை போலீசார் இதுவரை கண்டித்து அனுப்பி வந்தனர். இப்போது அபராதம் விதிக்கப்படுகிறது.

    10 மணி

    10 மணி

    10 மணிக்கு பின் தேவையின்றி வெளியே வரும் மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்கள் வந்த வழியிலேயே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். ஆனாலும், போலீசும் கண்டிப்பு காட்ட தொடங்கிய பின்பும் மக்கள் விதிகளை மதிக்காமல் கூட்டம் கூட்டமாக வெளியே சுற்றி வருகிறார்கள். இதனால் சென்னையை 348 பாகமாக மாநகராட்சி பிரித்துள்ளது.

     பிரிப்பு

    பிரிப்பு

    சென்னையை மொத்தம் 348 செக்டார் என்று பிரித்துள்ளனர். அதாவது சிறு சிறு பகுதிகளாக பிரித்து, ஒரு செக்டாரில் இருந்து இன்னொரு செக்டாருக்கு 10 மணிக்கு பின் செல்ல இ பதிவு அவசியம் என்று உத்தரவிட்டுள்ளனர். உதாரணமாக வட பழனியில் இருந்து வளசரவாக்கம் செல்ல இ பதிவு அவசியம். இது போல சென்னையை 348 செக்டார் பகுதிகளாக பிரித்துள்ளனர். '

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் 348 செக்டர் போட்டும் கூட மக்கள் கூட்டமாக வெளியே சென்றுள்ளனர். இதில் பல இடங்களில் போலீசார் பேரிகேட் போட்டு விசாரித்து வருவதால் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இன்று இதேபோல் அண்ணாசாலையில் இப்படி பேரிகேட் போட்டு சோதனை செய்யப்பட்ட நிலையில், அங்கு பல வாகனங்கள் வந்ததால் பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டது.

    டிராபிக்

    டிராபிக்

    மக்கள் ஒவ்வொருவரிடமும் போலீசார் தனி தனியாக விசாரணை செய்து, இ பதிவு சோதனை செய்ததால் பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டது. 348 செக்டார் திட்டம் என்பதே மக்கள் நீண்ட தூரம் பயணிக்க கூடாது. தங்கள் ஏரியாவிற்கு உள்ளேயே அவசரம் என்றால் செல்லலாம்.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள இடத்திற்கே செல்லலாம் என்றுதான் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த 348 செக்டார் விதியை மீறியும் மக்கள் வெளியே சுற்றி வருகிறார்கள். இது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. லாக்டவுன் விதிகள் அமலில் இருக்கும் போது மக்கள் பலர் இப்படி பொறுப்பற்று சுற்றுவது, லாக்டவுனையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

    English summary
    Traffic at Annasalai and other areas even during strict lockdown rules in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X