சென்னையில் இந்த பக்கம் போகாதீங்க! RBI சுரங்கப்பாதையில் இன்று முதல் 3 மாதம் போக்குவரத்து மாற்றம்
சென்னை: ரயில்வே பணியின் காரணமாக சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 3 மாதம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு ரயில்வே துறை சார்பாாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதனால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 26) இரவு 10 மணி முதல் 3 மாத காலத்துக்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக செயல்பட உள்ளது.
அதன்படி ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்த வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக ரிசர்வ் வங்கி சுங்கப்பாதை அணுகு சாலை, வடக்கு கோட்டை சாலை, (என்எஃப்எஸ் ரோடு), ஆர்ஏ மந்திரம், முத்துசாமி சாலை, டாக்டர் முத்துசாமி பாலம், வாலாஜா பாயிண்ட் கொடி மரசாலை, போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம்போல் இயக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications