"தனுஷ்" கழட்டிவிட்ட பெண்.. இரவெல்லாம் அழுது அழுது.. வீடியோ வேற.. ப்ளீஸ், நீ நல்லாயிரும்மா.. உருக்கம்
சென்னையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு முன்பு வீடியோ வெளியிட்டுள்ளார்
சென்னை: தான் விரும்பும் பெண், தனக்கு கிடைக்காவிட்டால் பரவாயில்லை, வேறு யாருக்குமே கிடைத்துவிடக்கூடாது என்று நினைத்து, நேசித்தவளையே கொடூரமாக கொலை செய்யும் இளைஞர்கள் பலர் உண்டு. ஆனால், இங்கு ஒரு பெண் வித்தியாசப்படுகிறாள்.. தன் ஆழமான காதலால்..
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை பகுதியில் வசித்து வருபவர் டேனியல் ராஜா.. இவருடைய மகள் ஏஞ்சல்.. 23 வயதாகிறது.. மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
இவரது வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்து வந்தவர் தனுஷ்.. 24 வயதாகிறது.. இருவருமே 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.. இவர்கள் 2 பேரும் பழகுவதை பார்த்த இரு குடும்பத்தினரும், இவர்களுக்கு திருமணம் செய்யவும் சம்மதம் சொல்லி இருந்தனர்..

ஏஞ்சல்
ஆனால் தனுஷின் நடவடிக்கையில் சில நாட்களாவே மாற்றம் தென்பட்டுள்ளது.. எனினும், இதை ஏஞ்சல் பெரிதுபடுத்தாமல் இருந்து வந்துள்ளார்.. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏஞ்சல் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது.. அதில், 'தனுஷ் வேறொரு பெண்ணோடு பழகி வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும்' இருந்துள்ளது... இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஏஞ்சல், அந்த மெசேஜ் உண்மையா? பொய்யா? யாராவது வேண்டுமென்றே மெசேஜ் அனுப்பி குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்களா? என்ற குழப்பத்திலேயே இருந்துள்ளார்..

ஏஞ்சல் + தனுஷ்
எனினும், இதை பற்றி நேரடியாகவே தனுஷிடம் கேட்டுவிட்டார்.. அதற்கு தனுஷ், ஆமாம், தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அந்த பெண்ணைதான் கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஏஞ்சல், கதறி அழுதுள்ளார்.. கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார்.. இந்த 2 நாட்களாகவே யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.. பிறகு, தனுஷ் வீட்டிற்கு சென்ற ஏஞ்சல், தனுஷின் பெற்றோரிடமே இதை சொல்லி நியாயம் கேட்டுள்ளார்.

போஸ்ட் மார்ட்டம்
அவர்களோ, 'இது மகன் எடுத்த முடிவு.. அவன் விருப்பம்.. அதை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டனர்.. அதற்கு பிறகுதான், எல்லா முயற்சியும் தோல்வியடைந்த நிலையில், ஏஞ்சல் தற்கொலை முடிவை எடுத்தார்.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... வெளியே சென்றிருந்த பெற்றோர், மகள் தூக்கிட்ட நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. பிறகு அங்கு வந்த போலீசார் ஏஞ்சல், உடலை மீட்டு போஸ்ட்மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ப்ளீஸ்.. நல்லாயிரும்மா
பிறகு விசாரணையையும் துவக்கினர்.. அப்போதுதான், தற்கொலைக்கு முன்பு ஏஞ்சல் செல்போனில் எடுத்த வீடியோ ஒன்றை கண்டுபிடித்தனர். அதில், "தன்னுடைய தற்கொலைக்கு நானே காரணம். யாருமே காரணம் இல்லை,.. நான் மட்டும்தான் காரணம்.. அவனை போய் அடிக்கிறது எதுவுமே பண்ணிடாதீங்க.. அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.. ப்ளீஸ்.. அதனால்தான் நான் இப்படி பண்ணிக்க போறேன்.. நீ நல்லாயிரும்மா" என்று தனுஷூக்கு கண்ணீருடன் சொல்லி உள்ளார்.. இந்த வீடியோ காண்போர் மனதை கலங்கடித்து வருகிறது..

கிப்ட்ஸ்
ஏஞ்சல் பி.காம் படித்துள்ளாராம்.. ஆனால், தனுஷ் அவ்வளவாக படிக்கவில்லை என்கிறார்கள்.. கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.. உயிருக்கு உயிராக 6 வருடம் நேசித்த காரணத்தினால், தனுஷை திருமணம் செய்வது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் ஏஞ்சல்.. அதுமட்டுமல்ல, காதலன் மீது அளவுகடந்த பிரியத்தால், தனுஷுக்கு பைக் உள்பட நிறைய பரிசு பொருட்களை வாங்கி தந்திருக்கிறாராம் ஏஞ்சல்.. இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. ஏஞ்சலுக்கு வாட்ஸ்அப்பில் அந்த மெசேஜை அனுப்பியதே தனுஷ்தானாம்..

நொறுங்கும் இதயம்
அதுவும் காதலிக்கும் பெண்ணின் போட்டோவை சேர்த்து அனுப்பி வைத்துள்ளார். அந்தப் படத்திற்கு கீழே, "நான் இந்தப் பெண்ணை காதலிக்கிறேன்" என்றும் தனுஷே எழுதியிருக்கிறார்.. இவ்வளவும் தனுஷிடம் தீவிர விசாரணை நடத்தியதில் தெரியவந்துள்ளது.. அவனை யாரும் அடிக்காதீங்க.. நீ நல்லாயிரும்மா என்று கண்ணீருடன் சொல்லிய ஏஞ்சலின் வீடியோ, இணையவாசிகளின் மனதை நொறுங்க வைத்து வருகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications