இனி போன் பேச மட்டுமல்ல.. உங்க போன் "நம்பருக்கே" தனியாக கட்டணமா? டிராய் மறுப்பு
சென்னை: இனி பேசுவதற்கு மட்டும் ரீசார்ஜ் செய்யாமல் மொபைல் எண்களை பயன்படுத்தவும் தனி கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வர டிராய் திட்டமிட்டதாக வெளியான செய்திகளுக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த செய்திகளை தற்போது டிராய் மறுத்துள்ளது . அப்படி திட்டம் எதுவும் இல்லை. நம்பர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் எண்ணம் இல்லை என்று டிராய் மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் இந்த மாற்றங்களை செய்ய முடிவு செய்தாக கூறப்பட்டது. தற்போது போன் பேச கட்டணம் செலுத்துகிறோம். இணையம் பயன்படுத்த கட்டணம் செலுத்துகிறோம்.
இனிமேல் பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று செய்திகளில் கூறப்பட்டது. அதாவது உங்கள் நம்பருக்கு என்று தனியாக இனி கட்டணம் செலுத்த வேண்டும். மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் இந்த புதிய மாற்றத்தை பரிசீலித்து வருவதாக செய்திகளில் கூறப்பட்டது.
பரிந்துரை என்ன?: உங்கள் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கு விரைவில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணத்தை அறிமுகப்படுத்த முன்மொழிந்து வருவதாக செய்திகளில் கூறப்பட்டது.
தொலைபேசி எண்கள் மதிப்புமிக்கது என்பதால் அதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டதாக செய்திகளில் கூறப்பட்டது..
ஒரு முறை கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளை டிராய் ஆய்வு செய்து வருவதாக.. மொபைல் எண்களுக்கான கட்டணத்தை மொபைல் சேவையை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனகங்கள் மூலம் டிராய் வசூலிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த செய்திகளை தற்போது டிராய் மறுத்துள்ளது . அப்படி திட்டம் எதுவும் இல்லை. நம்பர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் எண்ணம் இல்லை என்று டிராய் மறுத்துள்ளது.
பல நாடுகளில் உள்ள திட்டம்: ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, லிதுவேனியா, கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தொலைபேசி எண்களுக்கு கட்டணம் விதிக்கின்றன. ஆனால் இந்த முறை இந்தியாவில் கொண்டு வரப்படாது என்று டிராய் மறுத்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications