குமரியில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்களால் பரிதவித்த பயணிகள்.. பஸ்களில் அனுப்பி வைப்பு! என்ன நடந்தது?
சென்னை: நாகர்கோவில் முதல் குமரி வரையிலான வழித்தடத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை 4 ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. விவேக் எக்ஸ்பிர, குருதேவ் எக்ஸ்பிரஸ் உள்பட 4 ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் பஸ்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் சென்னை முதல் நெல்லை வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டது. தற்போது குமரி நாகர்கோவில் இடையேயும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பாலங்கள் அமைக்கும் பணி
இந்த ரயில் வழித்தடத்தில் சிறிய பாலங்கள் மற்றும் இடையிடையே மடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக தண்டவாளங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் விவசாய குளங்கள் இருப்பதால், அந்த குளத்தில் இருந்து மறுபுறம் தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக கான்கிரீட் பாலங்கள் தண்டவாளத்திற்கு கீழாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் பகல் நேரங்களில் இல்லாமல் இரவு நேரங்களில் மட்டும் நடந்து வருகிறது.
கடந்த இரு மாதங்களாக இந்த பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள குளத்தில் இருந்து மறுபுறம் தண்ணீர் செல்ல வசதியாக தண்டவாளத்தை மாற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைக்க ரயில்வே ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த பணியானது இரவு 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அந்த இடத்தில் இருந்த தண்டவாளங்கள் கிரைன் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டன.
பாதியில் நிறுத்தப்பட்டன
நேற்று முன் தினம் இரவு தொடங்கிய இந்த பணியானது காலை 5 மணி வரை நடந்தது. இந்த நேரத்தில் ரயில் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அந்த வழியாக நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு பிறகு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. தீப்ருகரில் இருந்து குமரிக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரயிலில் இருந்து பயணிகள் அவதியடைந்தனர்.
அங்கிருந்து பயணிகள் பஸ் மூலமாக நாகர்கோவில் மற்றும் குமரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதே போன்று, சாலிமர் டூ குமரி வந்த குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயில் இரணியல் ரயில் நிலையத்தோடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அதில் இருந்த பயணிகள் பஸ் மூலமாக நாகர்கோவில் மற்றும் குமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 5 ரயில்கள் இப்படி ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பயணிகள் அவதி
இதன் காரணமாக மற்ற ரயில்களும் தாமதமாக நாகர்கோவில் வந்தடைந்தன.. கோவை டூ நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ½ மணி நேரம் தாமதமாக அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதேபோன்று, குமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் 45 நிமிடம் தாமதமாக வந்தது. வழக்கமாக அதிகாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடையும். ஆனால் நேற்று தாமதமாக வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் பரிதவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications