பேக்கரி தொழில் செய்யப்போறீங்களா.. தமிழ்நாடு அரசு வழங்கும் 3 நாள் பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேக்கரி தொழில் செய்ய விரும்புவோருக்காக தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பயிற்சியை எங்கு எப்படி பெறுவது என்பதை பார்ப்போம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் "பேக்கரி பொருட்கள் தயாரித்தல்" பயிற்சி வரும் 14.02.2024 முதல் 16.02.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

Training in making bakery products will be provided by Tamilnadu government

இந்த பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட் போன்றவற்றின் கிடைக்கும் தன்மை, கருவிகள் மற்றும் உபகரணங்களின் உள்ளீடுகள், இயந்திரங்கள் முதலியன, ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்கவைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள் கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப் படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்கான விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும்.

அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032. 044-22252081 / 22252082 / 8668102600 / 8668100181 / 7010143022." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+