சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும்.. ரயில்கள் நடு வழியில் நிறுத்தம்.. பயணிகள் தவிப்பு
சென்னை: சென்னை மேல்மருவத்தூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜோத்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை மேல்மருவத்தூர் அருகே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள மக்கள் அதிகம் விரும்புவது ரயில் பயணத்தை தான். சொந்த ஊர் செல்வது என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா என்றுதான் பயணிகள் பார்ப்பார்கள். இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில வாரங்களிலேயே அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடும். சாதாரண நாட்களிலேயே பயணிகள் கூட்டம் இப்படி அலைமோதும். ரயில்களை பொறுத்தவரை சரியான நேரத்திற்கு சென்று விடும் என்பதால் பயணிகளால் அதிகம் விரும்பப்படுகிறது.
எனினும், அவ்வப்போது சிக்னல் கோளாறு, மற்றும் ரயில்களில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாகி பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் தான், இன்று செங்கல்பட்டு வருகே மதுராந்தகத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
மேல்மருவத்தூர் அருகே ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஜோத்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை மேல்மருத்தூர் அருகே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சிக்னல் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் சிக்னல் கோளாறு சீர் செய்யப்பட்டு ரயில் சேவை சீராகும் என்று தெரிகிறது. சொந்த ஊர் செல்லும் பயணிகள் ரயில்கள் தாமதம் ஆவதால், திட்டமிட்ட நிகழ்ச்சிகளுக்கு சரியான நேரத்தில் செல்லமுடியுமா? என பயணிகள் ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டும் ரயில் எப்போதும் கிளம்பும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்ததையும் காண முடிந்தது.
இந்த நிலையில், சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது. இதனால் ஒவ்வொரு ரயிலாக செல்ல தொடங்கியுள்ளது. பயணிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications