திருநங்கை மலைக்காவுக்கு வந்த வில்லங்க ஆசை! புதுவண்ணாரப்பேட்டையில் சடலம் ஆன வாலிபர்.. அதிர்ந்த சென்னை
சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே கூலித் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில், திருநங்கை ஒருவர் தன் ஆசைக்கு இணங்காததால் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. போதையில் இருந்த தொழிலாளியிடம் தன்னுடன் உறவு வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் கூலித் தொழிலாளி மறுத்துவிட்டதால் அடித்து தாக்கியுள்ளார். இதில் கழுத்தில் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்து இருக்கிறது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஜான் பாஷா (வயது 35). இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். புது வண்ணாரப்பேட்டை அருகே கூலி வேலை செய்து வரும் ஜான் பாஷா அங்கு நடைபாதையில் தங்கி வசித்து வந்தார். தினமும் வேலை முடிந்ததும் குடித்துவிட்டு தூங்குவதாக கூறப்படுகிறது.

பிணமாக கிடந்த கூலி தொழிலாளி
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ஜான் ஷா மதுபோதையில் புது வண்ணாரப்பேட்டை ஏ.சி.ஸ்கீம் சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கழுத்தில் சில காயங்களும் இருந்தன. இது குறித்து தகவல் அறிந்து வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் ஜான் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணையை தொடங்கினர். மேலும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தினார். மேலும் அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது திருநங்கைகள் சிலர் அவரிடம் பேசிவிட்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
ஆசைக்கு இணங்க மறுத்ததால்
இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு வசித்து வந்த திருநங்கைகளிடம் விசாரணை நடத்தினர். இதில் மலைக்கா என்ற (40) திருநங்கை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதாவது சம்பவத்தன்று இரவு ஜான் பாஷா குடித்துவிட்டு போதையில் சாலை ஓரம் கிடந்துள்ளார். அப்போது அவரது பையில் நிறைய பணம் இருப்பதை திருநங்கை மலைக்கா பார்த்துள்ளார். பின்னர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்து ஆசைக்கு இணங்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் என்னால் முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
சிறையில் அடைத்தனர்
எனினும் அவர் மீண்டும் அழைத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த திருநங்கை மலைக்கா கூலி தொழிலாளியை சரமாரி தாக்கியுள்ளார். இதில் அவரது கழுத்தில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் அப்படியே விழுந்துவிட்டார். இதனால் பயந்துபோன மலைக்கா அங்கிருந்து சென்று விட்டார். இதையத்து மலைக்காவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications