வெள்ளத்தில் மூழ்கிய வண்டிகளை ஸ்டார்ட் பண்ணிடாதீங்க.. பொதுமக்களுக்கு போக்குவரத்து ஆணையர் அட்வைஸ்!
சென்னை: வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம் என நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையின் காரணத்தினால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரையிலும் முழுவதுமாக வெள்ளநீர் வடியாமல் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படிப்படியாக தென் மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து பேருந்துகள் வழக்கம் போல இயங்க துவங்கி விட்டன. ஆனால், திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் இன்னும் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில் தற்போது வரையிலும் போக்குவரத்து சேவைகள் இயங்கவில்லை. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவை சீரமைக்கப்பட்ட பிறகே போக்குவரத்து முழுமையாக இயங்கத் தொடங்கும்.
கனமழை வெள்ளத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், வெள்ள நீரில் மூழ்கி ஏராளமான வாகனங்கள் பழுதுபட்டுள்ளன. பல வாகனங்கள் நீரில் முழுமையாக முழுகிவிட்டதால் பழுதகியுள்ள நிலையில், அதை சரி செய்யும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநில போக்குவரத்து ஆணையர் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம். மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களுக்கு மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து வாகன விற்பனையாளர்களும் சிறப்பு முகாம் அமைத்து வாகனங்களை சரி செய்யவும், சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் விண்ணப்பிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியாக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்றும் மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications