ஒரே ஒரு அரசு பஸ்ஸில் இருந்த இந்தி ஸ்டிக்கரும் அகற்றம்- கனிமொழி புகாருக்கு போக்குவரத்து துறை விளக்கம்
சென்னை: ஒரே ஒரு அரசு பஸ்ஸில் இருந்த இந்தி ஸ்டிக்கரும் அகற்றப்பட்டது என போக்குவரத்துத் துறை விளக்கமளித்துள்ளது.
அண்மைக்காலமாக ரயில்நிலையம், ரயில்கள் உள்ளிட்டவைகளில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. அது போல் மைல்கல்களிலும் இந்தி திணிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றுக்கு கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் கல்வித் துறையில் மும்மொழிக் கொள்கையை புகுத்த கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. இதை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கனிமொழி புகைப்படம்
இந்த நிலையில் தமிழக பேருந்தில் EMERGENCY, FIRE EXTINGUISHER என்பது ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே உள்ளது என கனிமொழி எம்பி புகைப்படம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
கனிமொழி டுவீட்
அந்த டுவிட்டில் அவர் கூறுகையில் தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கண்டனம். பேருந்தில் EMERGENCY, FIRE EXTINGUISHER என்பது ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே உள்ளது என புகைப்படத்துடன் கனிமொழி தெரிவித்துள்ளார்.

அகற்றம்
இதற்கு தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அளித்த விளக்கத்தில் கூறுகையில் ஒரே ஒரு அரசு பேருந்தில் இருந்த இந்தி ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுவிட்டது.

இந்தி எழுத்துகள் இல்லை
வெளிமாநிலத்தில் தயாரிக்கப்பட்டதால் அந்த பேருந்தில் இந்தி எழுத்துகள் இருந்தன. பயணிகளின் சேவைக்கு விடுவதற்கு முன்பே அந்த இந்தி ஸ்டிக்கர் அகற்றப்பட்டுவிட்டது. தமிழக பேருந்துகளில் எந்த பேருந்திலும் இந்தி எழுத்துகள் இல்லை என விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications