கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில்.. சத்தமே இல்லாமல் நடந்த மாற்றம்! குஷியில் துள்ளிய பயணிகள்! ஏன்?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடந்த மாற்றம் ஒன்று மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அங்கே செல்லும் மக்கள் இடையே இந்திய மாற்றம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். ஆசியாவில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக இது உள்ளது. இங்கே பேருந்து ஏற தினமும் ஒன்றரை லட்சம் பேர் வருகின்றனர்.
சென்னையின் மிகப்பெரிய அடையாளமாகவும் இந்த பேருந்து நிலையம் மாறி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே போதிய ஏடிஎம்கள் இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. முதலில் ஒரு ஏடிஎம் இருந்தது. அதன்பின் இரண்டு ஏடிஎம்தான் இருந்தது. இது மக்களுக்கு கடுமையான பிரச்சனைகளை கொடுத்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே மொத்தமாக 5 வங்கிகளின் 5 ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 5 ஏடிஎம்கள் காரணமாக மக்கள் இடையே மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
ரயில்நிலையம்: புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே கிளம்பாக்கத்தில் வரவிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் மோசமான திட்டமிடலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ரயில்வே மீண்டும் குழப்பமடைந்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ரயில் நிலையம் தமிழ்நாடு அரசின் செலவில் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ. 100 கோடி ரூபாயில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.
ஆனால் குழப்பம்: புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே கிளம்பாக்கத்தில் வரவிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் மோசமான திட்டமிடலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ரயில்வே மீண்டும் குழப்பமடைந்துள்ளது.
மூன்று நடைமேடைகளும் 300 மீட்டர் நீளம் மட்டுமே இருக்கும் என்பதால் கட்டப்படும் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் மட்டுமே நிற்க முடியும், அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் 380 மீட்டர் நீள நடைமேடை தேவைப்படுவதால் அங்கு நிற்க முடியாது.
இதனால் வெளிமாநில, வெளிமாவட்ட ரயில்கள் அங்கே நிற்காது. தாம்பரத்தில் இறங்கியே மாற வேண்டும். சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் ரயில் நிலையம் இந்த வருட இறுதியில் பயன்பாட்டிற்கு வரும். அதற்கு இடையில் ரயில் நிலையம் பேருந்து நிலையம் இடையிலான பறக்கும் நடை பாலமும் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் இறங்கிவிட்டனர்: இப்படிப்பட்ட நிலையில்தான் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையிலும், நகரச் சாலைகளில் ஆம்னி பேருந்துகள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் வர உள்ளதை முன்னிட்டும் ஷட்டில் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

வடபழனி, வேளச்சேரி, பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் உட்பட நகரம் முழுவதும் உள்ள பல முக்கிய இடங்களிலிருந்து ஷட்டில் வேன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த முன்முயற்சியானது நகருக்கு வெளியே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள புதிய கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது பயணிகளுக்கான கடைசி மைல் இணைப்பை எளிதாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கத்தில் வாகன நிறுத்துமிடம் தயாரானதும், அனைத்து ஆம்னி பேருந்துகளும் நகர சாலைகளுக்குள் நுழைய தடை விதிக்கப்படும்.
கிளாம்பாக்கத்தை நகரின் மையங்களுக்கு இணைக்க போதுமான MTC பேருந்துகள் இருப்பதாக அரசாங்கம் கூறினாலும் அவை போதுமானதாக இல்லை என்பதால் தனியார் நிறுவனங்கள் வடபழனி, வேளச்சேரி, பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் உட்பட நகரம் முழுவதும் உள்ள பல முக்கிய இடங்களிலிருந்து ஷட்டில் வேன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications