திருப்பத்தூர் அருகே நிலத்தை தோண்டும்போது தங்கப் புதையல்! தகவல் பரவியதும் வந்து கைப்பற்றிய தாசில்தார்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் நிலத்தை சமன் செய்யும் பணியின்போது, பழங்காலத்து குடுவையில் 86 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளன. இதுபற்றி தகவல் பரவிய நிலையில், 86 தங்கக் காசுகளையும் வட்டாட்சியர் கைப்பற்றினார்.
திருப்பத்தூர் சுந்தரம்பள்ளி பகுதியில் தனது விவசாய நிலத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி சமன் செய்யும் பணியில் ஆதவன் என்பவர் ஈடுபட்டார். அப்போது ஒரு குடுவையில் தங்கக் காசுகள் கிடைத்துள்ளன. பழங்காலத்து குடுவையில் 86 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளன.

இதையடுத்து, அவர் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், நிலத்தில் புதையல் கிடைத்த தகவல் பரவியது. விஏஓ விசாரணை நடத்திய நிலையில் அது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, ஆதவன் வசமிருந்த 86 தங்கக் காசுகளையும் வட்டாட்சியர் கைப்பற்றினார். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
1878-ம் ஆண்டு இந்திய புதையல் (Treasure Trove) சட்டம், நமக்குச் சொந்தமான நிலத்தில் புதையல் கிடைத்தால் அது யாருக்குச் சொந்தம் என்பதை குறிப்பிடுகிறது. நிலத்தில் புதையல் கிடைத்தால் உடனே அதை மாவட்ட ஆட்சியர் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அதை மறைத்து வைத்தல், விற்பனை செய்வது அல்லது அறிவிக்காமல் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். இதனை அரசுக்குத் தெரிவிப்பது என்றால் அரசாங்கம் உடனே அதை பறிமுதல் செய்துவிடும் என்று அர்த்தமல்ல. ஆனால், யார் உரிமையாளர் என்பதைத் தீர்மானிக்கும் வரை சட்டம் வெளிப்படைத்தன்மையைக் கோருகிறது.
தனியார் நிலத்தில் புதையல் கிடைத்தால், நிலம் உங்களுக்கே சொந்தமானதாக இருந்தால், அதில் கிடைக்கும் புதையலும் உங்களுடையது தான். உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றத் தீர்ப்புகள், தனியார் சொத்தில் கண்டுபிடிக்கப்படும் புதையலை அரசு பறிமுதல் செய்ய முடியாது என்பதை பலமுறை உறுதி செய்துள்ளன. ஆனால், அந்தப் புதையலுக்கு உரிமை கோரும் உண்மையான வாரிசுகள் யாரும் முன்வராத நிலைமையில் மட்டுமே, இந்த உரிமை முழுமையாக நில உரிமையாளருக்கு சென்று சேரும்.
உங்கள் நிலத்தில் வேறொருவர் புதையலைக் கண்டுபிடித்தால், சட்டம் உரிமையை சமமாகப் பகிர்கிறது. புதையலின் 50% நில உரிமையாளருக்கும், மீதமான 50% அதை கண்டுபிடித்த நபருக்கும் வழங்கப்படும். அதுவே, அரசு நிலத்தில் புதையல் கிடைத்தால், காடுகள், ரயில்வே, பொதுப்பணித் துறை நிலங்கள் போன்ற அரசுக்குச் சொந்தமான நிலங்களில் புதையல் கிடைத்தால் அது முழுமையாக அரசுக்கே சொந்தம். அதே நேரத்தில், அதனை கண்டுபிடிப்பவருக்கு அரசு வெகுமதி வழங்கலாம். ஆனால், அது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications