Exclusive: அண்ணாமலையின் ரகசிய ஆடியோ இருக்கு, குடும்பத்துக்காக பார்க்கிறேன்.. திருச்சி சூர்யா பேட்டி
சென்னை: திருச்சி சூர்யா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், "நான் பேசியது தவறு என்றால், தமிழிசை சௌந்திரராஜன் பேசியதும் தவறு தானே, தைரியம் இருந்தால் தமிழிசை மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா... என்னிடம் அண்ணாமலை ஒரு மாதம் பொறுமையாக இருக்குமாறு கூறினார். புதிய நியமனத்தின் போத சரியாகும் என்றார். அமர் பிரசாத் ரெட்டி அண்ணாமலை குறித்து பேசிய ஆடியோக்கள் என்னிடம் உள்ளது" என்றார்.
ஒன் இந்தியா தமிழுக்கு திருச்சி சூர்யா சிவா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழிசை விவகாரத்தால் நீக்கப்பட்ட போது என்னிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது, ஒன்றுமே தெரியாது.. ஆக்சன் எடுத்தே எனக்கு தெரியாது , பொறுமையாக இருங்க.. ஒரு மாதம் காத்திருங்கள் என்று சொன்னார். அவர் என்ன கணக்கில் சொன்னார் என்றால், இப்போது எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள். இப்போது யாருக்கும் பதவி இல்லாமல் போய்விட்டது.

ஒரு மாதம் பொறுமையாக இருங்கள், புதுசு போடுவார்கள் அல்லவா.. அப்போது பதவி அளிப்பார்கள் என்றார்.. ஆனால் எனக்கு மரியாதை தான் முக்கியம்.. அவருக்காக இருக்கிறோம்.. அவரை நம்பி இருக்கிறோம்.. அவரை பேசியதால் பதிலுக்கு பேசினோம்.. எல்லாவற்றையும் அவருக்காக செய்தோம். ஆனால் பிரச்சனை என்று வந்த போது தன்னை காப்பாற்றிக் கொண்டு என்னை காவு கொடுத்துவிட்டார்.
நான் பேசிய யூடியூப் வீடியோவை முன்னாள் ஆளுநர் தமிழிசையே போன் செய்து பிரைவேட் செய்ய வைத்தார்.. இப்படி அழுத்தம் கொடுத்துதான் வீடியோக்கள் நீக்கப்பட்டன. அண்ணாமலை vs தமிழிசை என்று வந்த போது, அண்ணாமலைக்கு ஆதரவாக பேசிய என்னை தமிழிசை என்னை டார்க்கெட் செய்து நீக்க வைத்தார். ஆனால் என்னை அண்ணாமலை இந்த விவகாரத்தில் எனக்க ஆதரவாக நிற்கவில்லை.. என்னை காப்பாற்றவில்லை. நான் போன் செய்து போதும் அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது . டெய்சி விவகாரத்தின் போதும் எங்கள் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை.. சமரசம் செய்து கொள்ளுமாறு கூறிவிட்டார்கள்.
ஆனால் காயத்ரி ரகுராமனை நீக்க வேண்டும் என்கிற போதில், அண்ணாமலை என்னை நீக்கினார். கனத்த இயத்துடன் நீக்குவதாக என்னிடம் கூறினார். ஆனால் ஒரு வருடம் கழித்தே என்னை பாஜகவில் மீண்டும் சேர்த்தார்கள். அதுவும் எப்படி சேர்த்தார்கள் என்றால், மறுநாள் காலை, நான் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சேர போகிறேன் என்று செய்திகள் வெளியானதால் , பாஜகவில் சேர்த்துக் கொண்டார்கள். எனக்கு எம்பி தேர்தலில் சீட் தருவதாக கூறியிருந்தார்கள்.. கடைசி வரை நம்பிக்கை தந்து ஏமாற்றி விட்டார்கள்..நான் அண்ணாமலை மீது பிரியாக இருந்தேன். அவர்கள் செயற்கையாக இருந்தார். அவர் அரசியல்வாதியாக இல்லாமல் அதிகாரியாக இருந்தார்.. நான் பேசியது தவறு என்றால், தமிழிசை சௌந்திரராஜன் பேசியதும் தவறு தானே, தைரியம் இருந்தால் தமிழிசை மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா என்று பேசினார்.
அப்போது நெறியாளர் அவரிடம், அண்ணாமலை 10000 கோடி சம்பாதித்து விட்டார் என்றும் என் மண் என் மக்கள் யாத்திரையில் முழுயைமாக வசூல் தான் என்றும், திமுக அமைச்சர்களிடமே மாதம் மாதம் பணம் வாங்கினார் என்றும் கூறினீர்களே.. அதற்கு ஆடியோ இருப்பதாகவும் கூறினீர்களே.. அப்படி ஒன்றும் இல்லையே என்று கேட்டார். அதற்கு திருச்சி சூர்யா, அமர்பிரசாத் ரெட்டியே என்னிடம் ஒப்புக்கொண்டார். ஆடியோ வரும் சார்.. ஆளும் கட்சியான திமுகவே அண்ணாமலையை எதிர்ப்பதற்கு பயன்படுகிறது.. எனக்க குடும்பம் உள்ளது.. எனக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லாத சூழலில், கொஞ்சம் நிதானமாகவே செயல்பட வேண்டும்.. நான் ட்விட்டரில் கூட அமர்பிரசாத் ரெட்டி யூடியூப்பில் பேசியதற்கு பதில் அளித்துள்ளேன்..
ஒரு மணி நேரம் நீ பேசியதை ரெக்கார்டு செய்து வைத்துள்ளேன் என்று கூறினார். அப்போது நெறியாளர், அமர்பிரசாத் அப்போது என்ன சொன்னார் என்று கேட்டார்.. அதற்கு திருச்சி சிவா, கூறும் போது, அமர்பிரசாத் ரெட்டி என்னிடம் கூறும் போது, நான் இல்லாமல் என் மண் என் மக்கள் யாத்திரையே இல்லை.. நான் தான் ஆள் சேர்த்துவிட்டேன்.. நான் வசூல் செய்த பணத்தில் தான் அந்த யாத்திரையே நடந்தது.. என்னையே அவர் குழிபறித்துவிட்டார் என இரண்டு மணி நேரம் என்னிடம் பேசினார். நான் ஒரு மணி நேரம் ஸ்கீரின் ஷாட் தான் போட்டிருக்கிறேன் என திருச்சி சூர்யா பேட்டியில் கூறினார். மேலும் பல தகவல்களை திருச்சி சூர்யா வீடியோவில் பேசியுள்ளார். வீடியோவில் பாருங்கள்.












Click it and Unblock the Notifications